எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனியின் சக்காளத்தியை ஆட்டிப்படைக்கும் குணசேகரன்.. சக்தி மீது பொறாமையில் கொந்தளித்த குந்தவை

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், வீட்டுக்கு திரும்ப வந்த பெண்களை வெளியே போக விடாமல் வீட்டுக்குள்ளே அடக்க வேண்டும் என்று குணசேகரன் விசாலாட்சி மூலம் காய் நகர்த்தி வருகிறார். ஆனால் இவர்களுடைய பிளான்களை தெரிந்து கொண்ட நான்கு பெண்களும் வீட்டிலிருந்தபடியே குணசேகரனுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

அந்த வகையில் பெண்கள் நான்கு பேரும் சேர்ந்து இனி வீட்டில் இருந்தபடியே கேட்டரிங் பிசினஸ் பண்ண போகிறோம். இதை நாங்கள் உங்களிடம் சொல்லி பெர்மிஷன் கேட்கவில்லை. தகவல்தான் சொல்கிறோம் என்று சொல்லி குணசேகரன் மற்றும் விசாலாட்சி மூஞ்சில் கரியை பூசி விட்டார்கள். அடுத்ததாக இவர்களுடைய பிசினஸை தொடங்குவதற்கு நான்கு பெண்களும் தயாராகி விட்டார்கள்.

இந்த சூழலில் ஜனனி அவருடைய போன் எங்கே என்று வீட்டிற்குள் முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஒரு ஓரமாக வெளியே கிடப்பதை பார்த்து ஜனனி அதை எடுப்பதற்கு போகிறார். அந்த நேரத்தில் மேலிருந்து ஒரு பூந்தொட்டி விழுவதை கவனித்த ஜனனி அங்கே இருந்து போவதற்கு முயற்சி எடுக்கிறார். அப்பொழுது பக்கத்தில் இருக்கும் ஒரு சுவர் தட்டி விழுந்ததால் ஜனனி காலில் பூந்தொட்டி விழுந்து விடுகிறது.

இதனால் அடிபட்ட ஜனனி கத்திய பொழுது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வந்து பார்க்கிறார்கள். உடனே கரிகாலன், சக்தியிடம் தகவலை சொல்லி சக்தி ஜனனியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார். ஹாஸ்பிடலுக்கு போன ஜனனியை பார்க்க வேண்டும் என ஈஸ்வரி ரேணுகா நந்தினி கிளம்பிய பொழுது குணசேகரன் யாரும் போக வேண்டாம். அதுதான் அவருடைய வீட்டுக்காரன் இருக்கிறான் அவன் பார்த்துப்பான் என்று சொல்லி தடுத்து விடுகிறார்.

அடுத்ததாக ஜனனியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்த சக்தி டிரீட்மென்ட் கொடுக்க சொல்கிறார். பிறகு ஜனனி ட்ரீட்மென்ட் எடுத்து முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பி பொழுது அங்கே குந்தவை வந்து விடுகிறார். குந்தவையை பார்த்த ஜனனி எப்படி இருக்கீங்க என்று கேட்டு பேச ஆரம்பித்து விடுகிறார். பிறகு உங்களுக்கு எப்படி தெரியும் சக்தி போன் பண்ணி சொன்னானா என்று கேட்கிறார். அதற்கு குந்தவை சக்தி போன் பண்ணவில்லை. குணசேகரன் மாமா தான் போன் பண்ணி சொல்லி இங்கே போக சொன்னார் என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு சக்தியும் குந்தவையும் பேச ஆரம்பித்த பொழுது ஜனனிக்கு கொஞ்சம் சக்தி மீது பொறாமை வந்துவிட்டது. உடனே குந்தவையை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைத்த ஜனனி, என்னால் வீல்சேரில் உட்கார முடியாது. தூக்கிட்டுப் போ என்று சொல்கிறார். உடனே குந்தவை தூக்கிட்டுப் போனால் கஷ்டமாக இருக்கும். நீங்கள் வீல்சேரில் உட்காருங்க என்று சொல்லியதும், ஜனனி அதெல்லாம் இல்லை என்னை சக்தி தூக்கி கொள்வான் என்று சொல்கிறார்.

உடனே சக்திக்கு சிரிப்பு வந்து விட்டது, ஜனனி கேட்டதும் சரி என்று சொல்லி ஜனனியை தூக்கி விடுகிறார். ஆனாலும் சக்தியை பார்த்த குந்தவைக்கு பொறாமை பொங்கி விட்டது. இதில் எதற்கு குந்தவை பொறாமை பட வேண்டும், முதலில் ஏன் குந்தவை ஹாஸ்பிடலுக்கு வர வேண்டும்.

எதற்கு குணசேகரன் ஈஸ்வரி நந்தினி ரேணுகாவை ஹாஸ்பிடலுக்கு போக வேண்டாம் என்று சொல்லி குந்தவை அனுப்பி வைக்க வேண்டும். இதற்குப் பின்னணியில் சக்தி ஜனனி பிரித்துவிட்டு குந்தவியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தான் குணசேகரனின் அடுத்த பிளான். அந்த வகையில் குணசேகரன் பேச்சைக் கேட்டு ஆடும் பொம்மையாகத்தான் குந்தவையும் ஆடி வருகிறார்.