மெலிந்து ஸ்லிம்மாக மாறிய குஷ்பூவின் புகைப்படங்கள்.. விட்டா 51 வயதிலும் ஒரு ரவுண்டு வருவாங்க போல!

குஷ்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்க்கு முறைப்பெண்ணாக நடித்திருப்பார். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்றது. ஆனால் ரஜினிகாந்த் என்ற மனிதனுக்காக மட்டுமே ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து சென்றனர்.

20 வயது கம்மியான குஷ்பு

kushboo
kushboo

குஷ்பு தொடர்ந்து படங்களில் தயாரித்து வந்தார். ஆனால் தற்போது முக்கியமான கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து வருவதால் இனிமேல் முழு நேரமாக சினிமாவில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளார். இதற்கான கதைகளையும் கதாபாத்திரங்களையும் இயக்குனரிடம் கேட்டு வருவதாக கூறி வருகின்றனர்.

51 வயதிலும் ஸ்லிம்மாக இருக்கும் குஷ்பூ

குஷ்பு உடல் எடை அதிகமாக கொஞ்சம் பப்ளி ஆக இருப்பார். இதனை பார்த்த ரசிகர்கள் குஷ்புவை ரசிக்க ஆரம்பித்தனர். குஷ்புவிற்காக மட்டுமே ரசிகர்கள் படங்கள் பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு குஷ்புவின் அழகில் மயங்கிய ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.

தற்போது குஷ்பு உடல் எடை குறைத்து வருகிறார். மேலும் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது கூட குஷ்புவிற்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கொடுக்கலாமே அந்த அளவிற்கு இளமையாகத் தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

பொண்ணோட ஆடையில் போஸ் கொடுத்த குஷ்பூ

குஷ்புவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகமாக வருவதால் சிறந்த கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். மேலும் குஷ்பு நடிப்பில் அடுத்து அடுத்து படங்கள் வெளியாக இருப்பதாகவும். இனிமேல் குஷ்பூ சினிமாவில் அதிக படம் நடிப்பார் எனக் கூறி வருகின்றனர்.