அப்பா-மகன் மோதலில் ரெட்ரோ.? திரை அலசல்

Suriya’s Retro Review : கார்த்திக் சுப்புராஜ்-சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்கும் ரெட்ரோ இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். ஜோஜு ஜார்ஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பாரி (சூர்யா) தனது அப்பாவை இழந்த நிர்கதியாக நிற்கும் நிலையில் அவரை தனது மகனாக தத்தெடுத்து வளர்க்கிறார் திலகரின் (ஜோஜு ஜார்ஜ்) மனைவி. திலகரை தனது அப்பாவாகவே நினைத்து வாழ்கிறார் பாரி.

ஆனால் திலகரோ தன்னை பாதுகாக்கும் ஒரு காவலனாக தான் பாரியை பார்க்கிறார். அடி தடி ரத்தம் என தனது தந்தை சொல்லும் வேலைகளை செய்யும் பாரி, ருக்மணி (பூஜா) மீது காதல் வயப்படுகிறார்.

சூர்யாவின் ரெட்ரோ விமர்சனம்

காதலுக்காக சண்டை எல்லாம் விட்டுவிட்டு கல்யாண வாழ்க்கையில் இறங்க பாரி நினைக்கிறார். இதனால் தனது அப்பா சரக்கை கைமாற்ற சொன்ன விஷயத்தை மறைக்கிறார். இந்த விஷயம் திலகருக்கு தெரிய ருக்மணியை கொன்றால் தான் நீ சரிப்பட்டு வருவாய் என திலகர் கூறுகிறார்.

அப்போது தவறுதலாக திலகரின் கையை சூர்யா வெட்டுகிறார். இதை பார்த்த ருக்மணி கோபத்துடன் அந்தமான் சென்று விடுகிறார். பாரியும் சிறைக்கு சென்ற சில வருடங்களுக்குப் பின் வெளியே வந்த அந்தமானுக்கு செல்கிறார்.

அப்போது திலகரின் அடியாட்கள் சூர்யாவை துரத்தி வருகிறார். கடைசியில் சரக்கு கைமாற்றப்பட்டதா, ருக்மணியை பாரி மணந்தாரா என்பது தான் ரெட்ரோ படத்தின் மீதி கதை. படத்தில் பிளஸ் சூர்யா அற்புதமாக நடித்திருக்கிறார்.

அதில் இடம்பெற்ற சிங்கிள் ஷாட் காட்சி பிரமிக்க வைத்திருந்தது. பூஜா ஹெக்டே மற்றும் சூர்யாவின் கெமிஸ்ட்ரி அற்புதம். ரெட்ரோ படத்தின் இரண்டாம் பாதி சுவாரஸ்யம் கம்மியாக இருந்தது சற்று குறையாக இருக்கிறது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5