ரெட்ரோ கொடுத்த மரண அடி.. சூர்யாவிற்கு தேவையான 2 காம்போ

Suriya : சூர்யா சிவகுமாரின் மகன் என்று வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் கடின உழைப்பால் ஒரு நல்ல இடத்தை பிடித்தார். ஆனால் சமீபகாலமாக அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

கங்குவா படம் தான் காலை வாரிவிட்டது என்றால் அதைவிட மோசமான தோல்வியை கொடுத்திருக்கிறது ரெட்ரோ படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த படம் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் ட்ரோலுக்கு உள்ளானது.

அதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் மந்தமடைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சூர்யாவின் கேரியர் அப்படியே தலைகீழாக மாறிவிடும். இதை இப்போது அவருக்கு தேவையான இரண்டு காம்போ இருக்கிறது.

சூர்யாவுக்கு தேவையான இரண்டு காம்போ

அதாவது சூர்யாவுக்கு மரண மாஸ் ஆன ஹிட் படங்களை கொடுத்தவர் தான் ஹரி. சிங்கம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இது சூர்யாவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தொடர்ந்து தோல்வி கொடுத்து வந்த அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது.

அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் சூர்யாவுக்கு காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார். ஆனால் சமீபகாலமாக ஹரி மற்றும் கௌதம் மேனன் இயக்கிய படங்கள் சரியாக போகவில்லை.

ஆனால் நல்ல கதையை தயார் செய்து சூர்யாவுக்கு கண்டிப்பாக ஹிட் படங்களை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் சூர்யா இந்த இரண்டு காம்போக்களை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.