இந்த சீரியலுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா? அதிர்ச்சியில் ஆட்டம் கண்ட விஜய் டிவி

முன்னரெல்லாம் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதில் ஏதாவது சர்ச்சை கருத்து இருந்தால் அதை கவனித்து அந்த படத்தை தடுக்க பல வேலைகள் நடக்கும். இதில் நிறைய முறை விஜய்யின் படங்கள் மாட்டியுள்ளது.

ஆனால் தற்போது சீரியல்களிலும் தொடர்ந்து கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் புரோமோ வெளியானபோது திடீரென மொத்த பேரும் கொந்தளித்துள்ளனர்.

இப்போதெல்லாம் சீரியல்களிலும் சினிமாவில் வரும் ரொமான்ஸ் காட்சிகள் முதல் ஜாதி ரீதியான காட்சிகள் வரை அனைத்தும் இடம்பெறுகிறது. இவ்வளவு நாட்களாக இது பற்றிய கருத்து எப்படி இருந்ததோ தெரியாது.

ஆனால் சமீபகாலமாக கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் உடனே சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து அனைவரது பார்வைக்கும் கொண்டு சென்று விடுகின்றனர். அப்படி ஒரு விஷயம்தான் விஜய் டிவிக்கு நடந்துள்ளது.

விஜய் டிவியில் அடுத்ததாக தென்றல் வந்து எண்ணை தொடும் என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலின் ப்ரோமோ வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தை செலுத்தும் வகையிலும் அதே சமயத்தில் கட்டாய திருமணத்தை ஆதரிக்கும் வகையிலும் இந்த புரோமோ அமைந்துள்ளதாக கூறுகின்றனர்.

இதன் காரணமாக ஆரம்பத்திலேயே விஜய் டிவியின் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விஜய் டிவி டிஆர்பிக்காக எது வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் என்பதை அறிந்த சிலர், என்னதான் கத்தினாலும் விஜய் டிவி கேட்கப்போவது இல்லை என்கிறார்கள்.

thendral-vandhu-ennai-theendum-serial-cinemapettai
thendral-vandhu-ennai-theendum-serial-cinemapettai