வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வாயாலயே அழிந்த தயாரிப்பாளர்.. சிவகார்த்திகேயனுடன் போடும் அடுத்த கூட்டணி

சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். டாக்டர், டான் என 100 கோடி வசூல் படங்களை கொடுத்து முன்னேறி வந்த நிலையில் பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனை காலை வாரி விட்டது. இப்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கமலின் ராஜ் கமல் நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் ஒரு படம் பண்ணுகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் முதல் முறையாக பிரபல தயாரிப்பாளர் ஒருவருடன் கூட்டணி போட உள்ளாராம். அவரைப் பற்றி தான் தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Also Read : சிவகார்த்திகேயன் மாதிரி வளர முடியாமல் போன நண்பர்.. விஜய் டிவி கை கொடுத்தும் பிரயோஜனம் இல்லை

அதாவது விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்தவர் தில் ராஜு. இவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தேவையில்லாமல் சில விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை எடுத்துள்ளார் போனி கபூர்.

அவர் ஒரு முறை கூட அஜித் தான் முதலிடத்தில் உள்ளார் என்றும், விஜய்யை தாழ்த்தியும் பேசியது கிடையாது. ஆனால் விஜய்யை வைத்து ஒரே ஒரு படம் எடுத்துவிட்டு தமிழ் சினிமாவில் தளபதி தான் நம்பர் ஒன் அவருக்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என பிரச்சனையை கிளப்பிவிட்டார்.

Also Read : ரஜினி உதாசீனப்படுத்திய இயக்குனர்.. ஆறுதல் கூறி அரவணைத்த சிவகார்த்திகேயன்

இதனால் தில் ராஜுவை வைத்து இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த சூழலில் இப்போது சிவகார்த்திகேயனுடன் தில் ராஜு புதிய படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஏற்கனவே தெலுங்கில் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் படு தோல்வியை சந்தித்தது.

ஆகையால் மீண்டும் அங்கு சிவகார்த்திகேயன் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் படத்தைப் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கு முன் வாரிசு படம் தில்ராஜுக்கு வெற்றி கொடுக்குறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read : எச்.வினோத்தை பார்த்து எப்படி பேசணும்னு கத்துக்கோங்க.. தில் ராஜை அசிங்கப்படுத்திய சம்பவம்

Trending News