திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2 திருமணம் செய்து விவாகரத்தான சரத்குமார்.. பொன்னியின் செல்வன் 2 விழாவில் பார்த்திபனுக்கு நடந்த அவமானம்

பார்த்திபன் எப்போதுமே விழாக்களில் கேலி, கிண்டலுடன் பேசக்கூடியவர். ஆனால் இப்போது மனவேதனையுடன் அவர் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் பல பிரபலங்கள் நடித்து கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக தற்போது பிரமோஷன் வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஒரு சொதப்பல் ஏற்பட்டுள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

Also read: பொண்டாட்டி தொல்லை தாங்காம கழட்டி விட்ட 5 நடிகர்கள்.. இளம் நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

அதாவது இந்த விழாவுக்கு எல்லோருக்கும் முன்பே முதலாளாக பார்த்திபன் வருகை தந்து விட்டாராம். மேலும் அங்கு என்ன பேச வேண்டும் என பல விஷயங்களை நேரமடுத்து யோசித்து வைத்தாராம். அங்குள்ள ஒரு நண்பரை அழைத்து என்னுடைய பெயர் வருவதற்கு பத்து நிமிடம் முன்னரே வந்து என்னிடம் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அப்படி யாருமே வந்து பார்த்திபனிடம் அடுத்து நீங்கள் பேச வேண்டும் என்று கூறவில்லையாம். மேலும் பார்த்திபனின் பெயர் அழைத்த பிறகு வராததால் சரத்குமார் பேசிக் கொண்டிருந்தாராம். அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக சரத்குமார் நடித்திருந்தார்.

Also read: 2ம் பாகத்தில் டல் அடிக்கும் பொன்னியின் செல்வன்.. சுதாரிக்காமல் கோட்டை விட்ட மணிரத்தினம்

இதில் பார்த்திபனின் கதாபாத்திரம் சின்ன பழுவேட்டையர். மேலும் பார்த்திபன் பேசும்போது தான் சரத்குமாரை அழைத்து அறிமுகம் செய்து வைக்க வேண்டுமாம். ஆனால் சரத்குமார் பாதி பேசிக் கொண்டிருக்கும்போது பார்த்திபனை அழைத்து நீங்கள் போய் மேடையில் பேசுங்கள் என கூறினார்களாம்.

அப்போது போய் நான் எப்படி பேச முடியும், அவரே ஏற்கனவே இரண்டு காதல் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர். இதில் நான் வேறு இடையில் போய் எப்படி தொந்தரவு செய்வது என கிண்டலாக பார்த்திபன் பேசி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் எப்போதும் பார்த்திபனுக்கு குறை சொல்வதே வழக்கமாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also read: பக்கா மெலடி சாங்.. வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அக நக பாடல் க்ளிம்ப்ஸ்

Trending News