செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தயவுசெய்து கிசுகிசு போடுங்க.. அடம்பிடிக்கும் தனுஷ் பட நடிகை

பொதுவாக நடிகைகள் தங்களை பற்றி கிசு கிசு வரக்கூடாது என்று தான் நினைப்பார்கள். ஆனால் இங்கு ஒரு நடிகை என்னை பற்றி கிசு கிசு எழுதுங்கள் என அடம் பிடித்து வருகிறார். அவர் வேறு யாருமல்ல பிரேமம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான்.

மலையாளத்தில் அறிமுகமான அனுபமா தற்போது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற படத்தில் மட்டும் நடித்துள்ள அனுபமா ஏனோ அதன் பின்னர் எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இருப்பினும் மற்ற மொழிகளில் ஓரளவிற்கு கைவசம் படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற அனுபமா பரமேஸ்வரன் என்னை பற்றி உங்கள் பத்திரிகைகளில் ஏதாவது கிசு கிசு எழுதுங்கள். கிசு கிசு வந்தால் தான் ஹீரோயின் பிரபலமாக முடியும். எனவே ஏதாவது கிசு கிசுக்கள் எழுதுங்கள் என அவரே வாண்டடாக கேட்டுள்ளாராம்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான் ஏதாவது ஒரு கிசு கிசு எழுத சொன்னால் என்ன எழுதுவது? நீங்களே ஒரு கண்டன்ட் கொடுங்கள் என பத்திரிகையாளர்கள் அனுபமாவிடம் கேட்டுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத அனுபமா ஷாக் ஆகிவிட்டாராம்.

தேவையில்லாமல் வாய் விட்டு வம்பில் மாட்ட வேண்டாம் என பதில் எதுவும் பேசாமல் இருந்து விட்டாராம். அனுபமா மட்டுமல்ல இவரை போல பல நடிகைகள் தங்களை பற்றி தினமும் ஏதேனும் ஒரு செய்தி வரவேண்டும் அல்லது கிசு கிசு வர வேண்டும் அப்போது தான் மக்கள் மத்தியில் நாம் எப்போதும் பிரபலமாக இருக்க முடியும் என நினைத்து வருகிறார்கள்.

சரியான கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலே போதும் ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்த கிசு கிசுவெல்லாம் தேவை இல்லாத வேலை என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News