வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அந்த தமிழ் நடிகர் தான் வேணும்னு அடம் பிடித்த பிரபாஸ்.. 3 மடங்கு சம்பளம்னு காட்டிய பச்சைக்கொடி

Prabhas: பிரபாஸ் கடந்த ஐந்து வருடங்களாக வெற்றியை பார்ப்பதற்கு போராடி வருகிறார். பாகுபலி படத்திற்குப் பிறகு பெரிதும் மக்களால் வரவேற்கப்பட்டார். அதனாலேயே இவருடைய அடுத்தடுத்த படங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்து ஆவலாக காத்திருந்தார்கள். ஆனால் பாகுபலி படத்திற்கு பிறகு வந்த படங்கள் எதுவுமே பிரபாஸ்க்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் அடுத்து கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இப்படம் நாளை அனைத்து திரையரங்களிலும் ரிலீசாக போகிறது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று பெரிய நம்பிக்கையே பிரபாஸ் வைத்து காத்திருக்கிறார். இதனை தொடர்ந்து கல்கி 2898 கிபி மற்றும் கண்ணப்பன் படத்தில் கமிட்டாய் இருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் மாருதியுடன் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் கைகோர்க்கப் போகிறார்.

இது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடந்த பொழுது பிரபாஸ் தமிழ் நடிகர்களில் ஒருவர் பெயரை சொல்லி கண்டிப்பாக இவர் என்னுடைய படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று இயக்குனரிடம் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இயக்குனரும் தமிழ் நடிகரை சந்தித்து பேசி இருக்கிறார். ஆனால் அவரோ தமிழில் ரொம்ப பிசியாக இருக்கக்கூடியவர். அத்துடன் கையில் கிட்டத்தட்ட எட்டு படங்களில் கமிட்டாய் இருக்கிறார்.

Also read: சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா.? வசூலில் தும்சம் செய்யும் பிரபாஸ்

அதனால் சற்று யோசித்த நிலையில் அவரை லாக் பண்ணும் விதமாக இங்கு என்ன சம்பளம் வாங்குகிறீர்களோ அதைவிட மூன்று மடங்கு சம்பளத்தை அதிகமாக தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். அந்த நடிகர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் தற்போது இவர் இல்லாத படங்களை இல்லை என்பதற்கேற்ப நடித்துவரும் காமெடி நடிகர் யோகி பாபு தான்.

இவருடைய வருகை தற்போது எல்லா பக்கமும் தேவை என்பதற்கு ஏற்ப ஒரு அதிர்ஷ்ட நடிகராகவே மாறி வருகிறார். இந்த காரணத்துக்காகவே எல்லா முன்னணி நடிகர்களும் யோகி பாபு கதாபாத்திரம் வேண்டுமென்று டிமாண்ட் பண்ணும் அளவிற்கு ஆகிவிட்டது. அந்த வகையில் யோகி பாபுவின் கால் சீட்டு கிடைத்த பிறகு படப்பிடிப்பிற்கான தேதிகளை முடிவு செய்யும் அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது.

எது எப்படியோ தமிழ் நடிகர்களின் பெருமை எல்லா பக்கமும் நிலவி வருவது மிகப்பெரிய பாராட்டக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் திறமை இருந்தால் போதும் அழகும் தோற்றமும் பெரிய விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப யோகி பாபு ஜெயித்துக் காட்டிவிட்டார். மேலும் பிரபாஸ் மற்றும் யோகி பாபுவின் கூட்டணி சம்பந்தமான அடுத்த அப்டேட்டுகள் கூடிய விரைவில் வெளிவரும்.

Also read: கேஜிஎஃப் காந்தாரா படத்தை தோற்கடிக்க போகும் சலார்.. முழிப்பிதுங்கி பேய் நிற்கும் பிரபாஸ்

- Advertisement -spot_img

Trending News