நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் விக்ரம் படத்திற்கு தான். முன்னதாக டைட்டில் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக கமல் படங்களை பார்த்து சினிமாவைக் கற்றுக் கொண்டு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் மேடைக்கு மேடை கமல் தான் என்னுடைய குருநாதர் என்பதை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார். இதன் காரணமாக மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே வெளியாக இருந்த விக்ரம் படம் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தீபாவளிக்கு தள்ளிச் சென்றது. மேலும் தேர்தல் முடிந்த கையோடு விக்ரம் படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் கமலஹாசன்.
முதலில் கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தற்போது ராகவா லாரன்ஸ் அந்த படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து மலையாள நடிகர் ஃபகத் பாசில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து பல வதந்திகள் கிளப்பி நிலையில் ராகவா லாரன்ஸ் தானாகவே முன்வந்து ஏன் விக்ரம் படத்தில் இருந்து விலகினார் என்பதை குறிப்பிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் தற்போது ஹீரோவாக ருத்ரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்திலும் நடிக்க உள்ளார். இதன் காரணமாகவே விக்ரம் படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.
