திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விண்ணைத்தாண்டி வருவாயா ரேஞ்சுக்கு அரங்கேறிய ராஜா ராணி 2 திருமணம்.. சிம்புவை ஓவர் டேக் செய்த ஆதி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. இத்தொடரில் ஆதி தனது காதலி ஜெனியை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். பின்பு சந்தியா இந்த உண்மை எல்லாம் கண்டுபிடித்து இருவருக்கும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்து வருகிறார்.

ஜெனி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் சிவகாமிக்கு ஒரு நிரடல் ஆகவே உள்ளது. மேலும் இந்த திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ளது. ஆனால் அதற்குள் கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பயத்தில் ராஜா ராணி குடும்பம் உள்ளது.

Also Read :புத்தம் புது போட்டியாளர்களுடன் களமிறங்கும் ஆண்டவர்.. பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங் எப்போது தெரியுமா?

ஆனால் எந்த பிரச்சனையும் இன்றி இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறுகிறது. கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உள்ள காட்சி போல ஆதியின் திருமணம் படுஜோராக நடக்கிறது. அதுவும் சில காட்சியில் சிம்புவையே ஓவர் டேக் செய்துள்ளார் ஆதி.

எப்படியோ நினைத்தபடி ராஜா ராணி 2 ஆதி, ஜெனி திருமணம் அரங்கேரி உள்ளது. இனி தான் அடுத்தடுத்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க உள்ளது. ஏனென்றால் ஜெனி வசதியான குடும்பத்தில் வளர்ந்த பெண். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் வேறு விதமாக இருக்கும்.

Also Read :மண்டபத்திற்கு ஜோடியாக வந்த கோபி-ராதிகா.. பரபரப்பை ஏற்படுத்திய பாக்யா

சிவகாமிக்கு காலையில் எழுந்த உடனே பூஜை புனஸ்காரம் செய்ய வேண்டும். ஆனால் ஜெனியோ கிறிஸ்துவ மதத்தில் பிறந்ததால் ஜபம் செய்யக்கூடியவர். இதனால் மாமியார் மருமகள், சண்டை அடிக்கடி அரங்கேறும்.

மேலும் சந்தியா ஐபிஎஸ் ட்ரைனிங்காக வெளிமாநிலத்திற்கு செல்ல உள்ளார். சந்தியா வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அர்ச்சனா பல சித்து வேலைகள் செய்ய வாய்ப்புள்ளது. இதனால் பல சுவாரசியமான திருப்பங்களுடன் இந்த வாரம் ராஜா ராணி 2 தொடர் வர இருக்கிறது.

Also Read :ஊர் வாயை அடைக்கும் தனம்.. இடத்தக் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் மருமகள்

Trending News