வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

சரத்குமார், அஜித்குமார் இருவரும் ஒரே நடிகை காதலித்துள்ளனர்.. அதுவும் யார் தெரியுமா?

சினிமாவை பொறுத்தவரை படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால், இதில் பெரும்பாலான நடிகர்களின் காதல் திருமணம் வரை செல்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே திருமணம் வரை தங்கள் உறவை கொண்டு செல்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சக நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய முக்கிய நடிகர் கமல்ஹாசன். இவர் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி வந்தார். இவருக்கு அடுத்தபடியாக காதல் சர்ச்சையில் சிக்கியவர் நடிகர் சரத்குமார். இவர் நடிகை தேவயானி மற்றும் ரம்பாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கி பின்னர் அதிலிருந்து வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான நபர், நடிகர் சரத்குமார் மற்றும் அஜித் குறித்து ஒரு ரகசிய தகவலை வெளியிட்டுள்ளார். இவர் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் ரகசிய தகவல்களை பொது வெளியில் பேசி வருகிறார்.

heera rajagopal
heera rajagopal

அந்த வரிசையில் தற்போது அஜித் மற்றும் சரத்குமார் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், ” சினிமாவில் காதலால் நடிகர் சரத்குமார் மற்றும் அஜித் மார்க்கெட்டை இழந்து சறுக்கல்களை சந்தித்தனர்.

மேலும் ஒரே நேரத்தில் நடிகை ஹீராவை சரத்குமாரும், அஜித்குமாரும் காதலித்து வந்தனர். அதில் அஜித்குமார் லவ் லட்டர் எழுதியதை நானே பார்த்திருக்கிறேன் என” கூறியுள்ளார்.

தற்போது அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் பழைய நினைவுகளை தூசி தட்டுவது சரியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News