புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பவுடர், ரத்தக்களரி இல்லாத சினிமா.. லோகேஷ், நெல்சனை குத்தி பேசிய சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்

Producer directly attacked Lokesh and Nelson: சமீப காலமாகவே வெளியாகும் டாப் ஹீரோக்களின் படம் எல்லாம் வன்முறையை தான் போதிக்கிறது. இதனால் இளைய சமுதாயம் கெட்டு குட்டிச்சுவர் ஆகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை இப்போது சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளரும் பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ போன்ற படங்களில் எல்லாம் பவுடர், ரத்தம் படிந்த மேக்கப் கொண்ட முகங்களை வைத்து ஹிட் கொடுத்தார். அதேபோல் தான் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஜெயிலர் படத்திலும் வன்முறை, ரத்தக்களரியை அதிகம் காட்டி கல்லா கட்டினார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வரும் சூழலில். படத்திற்கான ப்ரொமோஷன்களை சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தின் முக்கியமான கேரக்டர் ஏலியன் தான்.

Also Read: அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்.. அதிக லாபத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

லோகேஷ், நெல்சனை நேரடியாக தாக்கிப் பேசிய தயாரிப்பாளர்

மேலும் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பேசிய அயலான் பட தயாரிப்பாளர் KJR ராஜேஷ், ‘அயலான் திரைப்படம் ஏற்கனவே ஒரு பிளாக்பஸ்டர். நாங்கள் ஏலியனை நம்புகிறோம். பவுடர் (போதை பொருள்), ரத்தம் படிந்த மேக்கப் கொண்ட முகங்கள் போன்றவற்றை நம்புவார்கள் அல்ல’ என்று பேசினார். அயலான் படத்தில் நோ ஸ்மோக்கிங், நோ ஆல்கஹால், நோ வயலன்ஸ், நோ கிளாமர், எந்த இடத்திலும் ரத்தம் சிந்தவில்லை. வன்முறைக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள், நல்ல கதைக்கும் ஆதரவளிப்பார்கள். அயலான் படத்தின் வெற்றியை பார்த்த பின்பு தான் வன்முறை இல்லாமலும் படம் வெற்றி பெறும் என்று நம்புவார்கள்.

இனிமேலாவது வயலன்சை தவிர்த்து இளைய தலைமுறைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லக்கூடிய படங்களை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் நெல்சன், லோகேஷ் இடம் இதைப் பற்றி கேட்டால் ‘படத்தின் கதைக்கு தேவைப்படுகிறது என்பதற்காக தான் போதைப்பொருள், வன்முறையை காட்ட வேண்டியதாக இருக்கிறது’ என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள்.

Also Read: 12 டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒருத்தரை மட்டும் கழட்டிவிட்ட த்ரிஷா.. யார் தெரியுமா?

Trending News