வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம்கட்டிய புத்தம் புதிய சீரியல்

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் டிஆர்பி டேட்டிங்கில் தெரிந்துவிடும் அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

கயல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஒரு பெண் எப்படி தனியாளாக இருந்து தனது குடும்பத்தின் பாரங்களை ஏற்று சமூகத்திற்கு சேவை செய்யும் ஒரு செவிலியர் ஆகவும் நல்ல நட்பிற்கு உதாரணமாகவும் உள்ளார் என்று கதைக்களம் அமைந்துள்ளது. சீரியலின் ஹீரோ ஹீரோயின் பள்ளிப் பருவத்தில் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.

பின் ஹீரோ தன் காதலை தன் தோழியிடம் தெரிவிக்கின்றார் ஆனால் அதை கயல் ஏற்கவில்லை. எழில் தன் காதலை கயலிடம் தன் பிறந்த நாள் விழாவில் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழிலின் காதலை கயல் ஏற்பாரா என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். ரசிகர்கள் பெரும் விரும்பும் கயல் சீரியலான டிஆர்பி-யில் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகிறது.

Also Read: முதல புருஷன், இப்ப பொண்டாட்டியா.? டிஆர்பிக்காக விஜய் டிவி பிரபலங்களை கூண்டோடு தூக்கும் சன் டிவி

எதிர்நீச்சல்: டிஆர்பி-யில் 2-ம் இடத்தை பிடித்திருக்கும் புத்தம் புதிய சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியல் ஆணாதிக்க தோடு இருக்கும் ஒரு சிலரைப் பற்றியதாகவும் அவர்களுடைய குணத்தால் கஷ்டப்படும் பெண்களின் மனக்குமுறலை சொல்வதாகவும் சீரியல் அமைந்துள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி மீண்டும் வீட்டிற்கு வந்து எதிர்பாராத திருப்பங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆதி குணசேகரன் குடும்பத்தில் பட்டம்மாள் பாட்டிக்கு சொத்தில் 40% இருப்பதை வைத்து குடும்பத்தை கதிகலங்க வைத்துள்ளனர். இரவு 9.30 மணிஅளவில் ஒளிபரப்பாகும் இத்தொடரை அதற்கு முன்பாகவே ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

சுந்தரி: டிஆர்பி-யில் 3-ம் இடத்தை பிடித்திருக்கும் சுந்தரி கதை தொடரில் கிருஷ்ணாவும் மாலினியும் கொடைக்கானல் சென்றுள்ளனர் அவர்களுடன் சுந்தரி மற்றும் சித்தார்த்தும் தங்களது ஐஏஎஸ் ட்ரைனிங் காக கொடைக்கானல் சென்றுள்ளனர். கார்த்திக்கு சுந்தரி கொடைக்கானலுக்கு ட்ரெய்னிங் செல்கிறாள் என்று தெரிந்தும் அனுவை அங்கு கூட்டிச் செல்கிறார்.ஆனால் இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் கண்டிப்பாக பெரிய பிரச்சனை ஆகும். இதனை தவிர்க்கும் விதமாக கதைக்களம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

Also Read: விஜய் டிவியை ஒழித்துக்கட்ட சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 1000 எபிசோட் கடந்த இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

ரோஜா: ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த பக்தியோடு கூடிய கதைக்களத்தை கொண்ட ரோஜா தொடரில் அர்ஜுனை பழிவாங்கும் நோக்கில் அர்ஜுனின் குழந்தையை சாக்ஷி யசோதா மற்றும் பாலு மூலமாக தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார். குழந்தையை கண்டம் இருப்பதாக பெரியநாயகி அம்மாவிடம் அர்ஜுன் மற்றும் பாட்டியும் பூஜைக்காக சென்றுள்ளனர்.

இக்கதை களம் அர்ஜுனை பழி வாங்குவதற்காக சாக்ஷி முழுமூச்சில் இறங்கியதை காட்டியுள்ளது. அர்ஜுன் தனது குழந்தையை நிறைய போராட்டங்களை கடந்து எப்படி காப்பாற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சீரியல் டிஆர்பி-யில் 4-ம் இடத்தை பெற்றுள்ளது.

Also Read: 4 வருடங்களாக ஒளிபரப்பாகும் சீரியலை ஊத்தி மூடும் சன் டிவி.. 1200 எபிசோடை தாண்டிய ஃபேவரட் நாடகம்

பாக்கியலட்சுமி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 5-ம் இடத்தில் பிடித்திருக்கிறது. இதில் பாக்கியலட்சுமி தன்னை விட்டு சென்ற கணவர் கோபியை, மகள் இனியாவின் மூலம் பக்கா பிளான் போட்டு அவரை சந்தி சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் சீரியல் ரசிகர்களும் குதூகலமாகியுள்ளனர்.

இவ்வாறு இந்த 5 சீரியல்களும் டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள் ஆகும். இதில் தினமும் எதிர்பார்க்க முடியாத திருப்பங்களை கொண்டிருப்பதுடன் யூகிக்க முடியாத கதைகளையும் கொண்டுள்ள புத்தம் புதிய சீரியல் ஆன எதிர்நீச்சல் முண்டியடித்துக் கொண்டு முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Trending News