விஜய் டிவியில் இரவு பத்தரை மணிக்கு ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ ஊராட்சிமன்ற தலைவி என்ற சீரியலை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
மேலும் இந்த சீரியலில் தேன் மொழியாக, விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜாக்குலின் சிறப்பாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹீரோவாக அருள் வேடத்தில் சித்தார்த்தும், பாட்டியாக வரலட்சுமியும் சிறப்பாக நடித்து வருகின்றனர்.
இந்த நாடகத்தின் தொடக்கத்தில் ஹீரோ அருள், தனது தந்தையின் வற்புறுத்தலால் ஹீரோயின் தேன்மொழியை திருமணம் செய்து கொள்வார்.
இப்படி ஒரு நிலையில் லாக் டவுனுக்கு பிறகு கதை பயங்கர மாசாக செல்கிறதாம். ஆம், ஆரம்பத்தில் தேன்மொழியை வெறுத்து ஒதுக்கிய அருள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தேன்மொழியின் காதலைப் புரிந்து கொண்டு, அவரை நாடகத்தில் காதலிக்க ஆரம்பித்து விட்டாராம்.
ஏற்கனவே ஹீரோ சார பயங்கரமா காதலிச்ச நம்ம ஹீரோயின் கல்யாணத்துக்கு அப்புறம் டபுள் மடங்கா காதலிக்க, இப்போ ஹீரோ சாருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
தற்போது அருள் தேன்மொழியிடம் எவ்வாறு காதலை சொல்லப் போகிறார் என்ற கோணத்தில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாட்டி அருளுக்கு பக்கபலமாக இருந்து ஐடியாக்களை தந்து அசத்தி வருகிறார். அதே போல் இருவரும் ஏற்கனவே காதலிப்பது போல் அருள் கனவு கண்ட காட்சி சீரியலில் சில நாட்களுக்கு முன்பு காட்டப்பட்டது.
எனவே, வெகுவிரைவில் தேனும் அருளும் சேர்ந்து இந்த நாடகத்தில் டூயட் பாட அதிக வாய்ப்புள்ளதால், இந்த சீரியலின் ரசிகர்கள் அனைவரும் படுகுஷியில் உள்ளனராம்.
இதை பார்த்து ரசிகர்கள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் நடக்க இருப்பதாக புரளியை கிளப்பி உள்ளனர். அது உண்மை இல்லை, அதாவது ஜாக்குலினுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.