நாகேஷின் வாழ்க்கையில் திருப்புமுனை கொடுத்த 5 படங்கள்.. இன்று வரை பேசப்படும் கதாபாத்திரம்

தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் நடிகர் நாகேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த வகையில் இவருக்கு திருப்புனையை ஏற்படுத்திய ஐந்து திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

சர்வர் சுந்தரம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேசுடன் இணைந்து முத்துராமன், கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருப்பார்கள். ஒரு சர்வராக இருக்கும் நபர் சினிமாவில் ஹீரோவாக மாறுவது பற்றிய கதைதான் இந்த படம். இப்படம் நாகேஷின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாக இன்றும் இருக்கிறது.

Also read: இதுவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாத 4 வில்லன்கள்.. என்ன மிரட்னாலும் சிரிப்பு தான் வருது

எதிர்நீச்சல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், சௌகார் ஜானகி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் நாகேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இப்போதும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

தேன் கிண்ணம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேஷ், சுருளி ராஜன், விஜயலலிதா ஆகியோர் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி படமாக வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேஷின் நடிப்பு நன்றாக இருக்கும். அதனாலேயே இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

Also read: எம்ஜிஆரின் கோபத்தைத் தூண்டிய நாகேஷ் .. தோட்டத்திற்கு வர சொல்லி என்ன செய்தார் தெரியுமா.?

திருவிளையாடல் புராணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவாஜி, நாகேஷ், சாவித்திரி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் தருமி என்ற கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருப்பார். அதிலும் சிவபெருமானாக வரும் சிவாஜியிடம் அவர் உரையாடும் அந்தக் காட்சி இப்போது வரை பிரபலமாக இருக்கிறது.

நீர்க்குமிழி கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் நாகேஷ் கதையின் நாயகனாக நடித்திருப்பார். மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அங்கு வேலை பார்ப்பவர்கள் பற்றி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் நாகேஷுக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது.

Also read: பாலசந்தருக்கு பிடிக்காத நாகேஷ் படம்.. உயிரைக் கொடுத்து நடித்தும் பிரயோஜனமில்லை