இன்றும் பயமுறுத்தும் 6 திரில்லர் படங்கள்.. விஜயகாந்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போன சூப்பர் ஹிட் மூவி

எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் திரில்லர் படங்களை திகில் ஊட்ட கூடிய பேய் படங்களாக வித்தியாசமான முறைகளில் எடுத்து இருப்பார்கள். ஆனால் உண்மையாகவே பேய் வந்தால் என்ன மனோபாவங்கள் இருக்குமோ அதே மாதிரி படங்களை இயக்கியிருப்பார்கள்.

இது ஒரு வகையில் பாராட்டக்கூடியது தான். ஆனாலும் படம் பார்க்க வருபவர்கள் பயந்து அடித்து ஓடும் அளவிற்கு இருட்டில் திகிலாய் காட்டப்பட்டிருக்கும். அவை காண்போரை பதைப்பதைக்க செய்யும் விதமாக அமைந்திருக்கும். அவ்வாறு இன்று வரை பயமுறுத்தும் 6 திரைப்படங்களை பற்றி இங்கு காணலாம்.

சிகப்பு ரோஜாக்கள்: 1980ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் வெள்ளி விழா கண்டது. இப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் கமல் தன் சிறுவயதில் மேற்கொண்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக கதை அமைந்திருக்கும். மேலும் திகில் கொடுக்கும் திரில்லர் படமாக கொண்டு செல்லப்படும். ஆனால் இறுதியில் கமலின் மனநோயால் ஏற்படக்கூடிய பிரச்சனையாக காட்டப்பட்டிருக்கும்.

ஊமை விழிகள்: 1986ல் ஆர் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜயகாந்த், அருண் பாண்டியன், சந்திரசேகர், ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரவிச்சந்திரன் தான் காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டதால், மூர்க்க குணம் கொண்டு இது போன்ற பெண்களின் கண்களை சூறையாடுவது போன்று கதை அமைந்திருக்கும். ஆனால் இப்படத்தை இருட்டில் எடுத்து கூடுதல் திகிலை ஏற்படுத்தி இருப்பார்கள். மேலும் இப்படத்தில் உண்மையை கண்டறியும் விஜயகாந்தின் நடிப்பு அடுத்தடுத்து பல படங்களை பெற்று தந்தது.

மூடுபனி: 1980ல் பாலு மகேந்திரா இயக்கத்தில் ஷோபா, பிரதாப், காந்திமதி ஆகியோர் இணைந்து நடித்திருப்பார்கள். நாவலை தழுவிய படமான இப்படம் மக்களின் வரவேற்பு பெற்றது. மேலும் இப்படத்தில் உடல்ரீதியான தொழிலில் ஈடுபடும் பெண்களை கண்டால் ஆத்திரம் அடையும் ஹீரோவின் மனநிலை கொண்டு கதை அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து படங்களின் பேக்ரவுண்ட் மியூசிக் கூடுதல் திகிலை ஏற்படுத்தி இருக்கும்.

விடியும் வரை காத்திரு: 1981ல் பாக்யராஜ் இயக்கி,நடித்த திரில்லர் படமாகும். இப்படத்தில் மனரீதியான பிரச்சனையை எதிர்கொண்ட ஒரு பெண்ணின் மனநோயை தூற்றிப் பெரிதாக்கி அதை பேய் பிடித்தது போல காட்டப்பட்டிருக்கும். மேலும் இப்படத்தில் பெண்ணின் அலறல் சத்தமே கூடுதல் பயத்தை ஏற்படுத்தும். மேலும் இத்தகைய பிரச்சினையை சரி செய்து சரியான மனநிலைக்கு அப்பெண்ணை கொண்டு வருவது கதையாக அமைந்திருக்கும்.

டிக்டிக்டிக்: 1981ல் பாரதிராஜா இயக்கத்தில் கமல், ராதா, மாதவி ஆகியோர் இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்தின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கொடுக்கக் கூடிய சவுண்ட் எஃபெக்ட் பெரிதளவு பயத்தை உண்டு படுத்திருக்கும். மேலும் இப்படத்தில் பழிவாங்கும் படலமாக இயக்குனர் தன் முயற்சியை வெளிப்பாட்டிருப்பார். இப்படமும் மக்களின் வரவேற்பை பெற்று தந்தது.

நூறாவது நாள்: 1984ல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தின் அடுத்தடுத்து நிகழும் பெண்களின் மரணத்தின் காரணத்தை அறியும் விதமாக கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். மேலும் இப்படத்தில் குற்றவாளியை கண்டறிய மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்புற அமைந்திருக்கும்.