விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரண்டாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது பாடகி சித்ரா பாடியிருக்கும் அம்மா சென்டிமென்ட் நிறைந்த மெலோடியான 3-வது சிங்கிள் பாடல் தான் விஜய்க்கு வாரிசு படத்தில் பிடித்தமான பாடல் என்றும் படத்தில் இசையமைப்பாளர் தமன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஷோபா சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய்க்கு அம்மா சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகாது என்பதை போட்டு உடைத்திருக்கிறார். சில சமயம் ஷோபா விஜய்யிடம் புதிதாக கமிட் ஆகும் படத்தைக் குறித்தும் அந்த படத்தின் கதை குறித்தும் கேட்பாராம்.
அந்த சமயத்தில் விஜய் இதுவரை வெளியான பிற படங்களுடன் ஒப்பிட்டு சொல்வாராம். எப்போதுமே விஜய் அந்த படத்தில் வரப்போற விஷயத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள மாட்டாராம். ஆனால் விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தின் பிரிவியூ ஷோவை பார்த்துவிட்டு அவருக்கு படத்தைக் குறித்து அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.
ஏனென்றால் அந்த படத்தின் கிளைமாக்ஸில் பாடல் அமைந்திருப்பது வித்தியாசமாக இருந்தாலும் இதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற கலக்கம் ஷோபாவிற்கு இருந்திருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கும் அது பிடித்துப் போனதால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.
அதுமட்டுமில்லாமல் ஷோபாவே அந்தப் படத்தை 20 தடவைக்கு மேல் பார்த்திருக்கலாம். இப்போதும் அந்த படம் டிவியில் போட்டாலும் நாற்காலி நுனியில் அமர்ந்து ஆர்வத்துடன் பார்ப்பாராம். அப்படிப்பட்ட இந்த படம் திரையரங்குகளிலும் 150 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட் அடித்தது.