Mohan Movie Actress: சினிமாவைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைகளை யாரும் அவ்வளவு ஈசியாக மறந்திட முடியாது. அந்த வரிசையில் 80களில் மிகவும் கொடிகட்டி பறந்த மோகனின் காதல் படங்களில் நடித்த நடிகைகள் மிகவும் பிரபலம் ஆகி இருக்கிறார்கள். அத்துடன் நிறைய பட வாய்ப்புகளும் அவர்களை தேடி போயிருக்கிறது.
அப்படி 80களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைக்கு கல்யாண வாழ்க்கை நினைத்தபடி அமையாமல், விவாகரத்து ஆன கணவரையை நினைத்து ஏக்கத்துடன் ஏங்கிக் கொண்டிருக்கிறார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை ரஜினி, கமலுக்கு பெரிய போட்டியாக இருந்த ராமராஜன் மனைவி நளினி தான்.
அதாவது ராமராஜன் மற்றும் நளினி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து 1987இல் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு சந்தோசமாக ஆரம்பித்த இவருடைய இல்லற வாழ்க்கையில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. கிட்டத்தட்ட 13 வருடங்களாக ஒன்று சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்து விட்டது.
இதற்கு அடுத்து சுமுகமாக பேசி ஒருவரை ஒருவர் பிரிந்து விவாகரத்து செய்து விட்டார்கள். ஆனால் அதன் பிறகு அந்த குழந்தைகளை முழு பொறுப்புடன் பார்த்துக்கொண்டது நளினி. அதே நேரத்தில் ராமராஜன் அப்பாவாக இருந்து செய்ய வேண்டிய கடமைகள் அனைத்துமே சரிவர செய்து வந்திருக்கிறார்.
ஆனால் இவர்களுக்குள் என்னதான் விவாகரத்து ஆனாலும், வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டு தற்போது வரை வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் நளினி எப்பொழுது பேசினாலும் அவருடைய கணவர் ராமராஜனை பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார். எந்த இடத்திலும் இவரை தவறாக பேசுவதோ அல்லது விட்டுக் கொடுத்து பேசுவதோ கிடையாது.
தற்போது வரை ராமராஜனை மனதில் நினைத்து கொண்டு அவருக்காகவே ஏங்கி, மனதில் அவ்வளவு காதலை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார். அத்துடன் நளினிக்கு, ராமராஜன் பெயர் சொன்னாலே முகம் வெட்கத்தில் அப்படியே சிவந்து விடுகிறது. கிட்டத்தட்ட 23 வருடங்கள் விவாகரத்து ஆகி தனிமையில் இருந்தாலும் கூட மனதில் அவ்வளவு காதலை சுமந்து கொண்டு சுற்றி வருகிறார்.