எஸ்ஏசி- இன் இந்த 5 படத்தால் பொம்பள சகிலா என அடைமொழி வாங்கிய விஜய்.. முகம் சுளிக்க வைத்த அடல்ட் அஸ்திவாரம்

Vijay Romantic Movie: விஜய் இப்பொழுது மாஸ் ஹீரோவாகவும், ஆட்ட நாயகனாகவும் வெற்றி பெற்று வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் காதல் மற்றும் ரொமான்டிக் படங்களில் நடித்து நடிகைகளை முத்தத்தாலே நனைய வைத்திருப்பார். இன்னும் சொல்லப்போனால் இவருடைய படங்களை பார்க்கும் பொழுது ஏதோ அடல்ட் மூவியை பார்ப்பது போல் பீல் ஆகும். அந்த அளவிற்கு ஹீரோயின் உடன் உரசிக்கொண்டு பொம்பள சகிலா என்று அடைமொழியை வாங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

தேவா: எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு தேவா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சுவாதி, சிவகுமார், மனோரமா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய், சுவாதி மீது ரொம்பவே காதல் வயப்பட்டு இருப்பார். அந்த வகையில் சுவாதிக்கும் விருப்பம் இருக்கு என்று தெரிந்து கொண்டு அவருடைய காதலை சொல்ல வைப்பார். ஆனால் இவரை பொறுத்தவரை காதல் வாயால சும்மா சொல்லக்கூடாது. கட்டி பிடித்து, முத்தம் கொடுத்து அதன் பின் தான் சொல்ல வேண்டும் என்று ஸ்வாதியை படாத பாடு படுத்தி இருப்பார்.

செந்தூரப்பாண்டி: எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு செந்தூரப்பாண்டி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், விஜய், கௌதமி, யுவராணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க காதல் படமாகவும், ரொமான்டிக் நடிகராகவும் விஜய் நடித்துக் காட்டியிருப்பார். அத்துடன் விஜய் அவருடைய காதல் சித்து விளையாட்டுகளை இதில் அரங்கேற்றி இருப்பார். அதிலும் விஜய்யும் யுவராணியும் கபடி விளையாடுகிற பேர்ல பண்ற சில்மிஷங்கள் ரொம்பவே ஓவராக போய் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும்.

ரசிகன்: எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு ரசிகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சங்கவி, ஸ்ரீவித்யா, மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் மற்றும் சங்கவி ஒருவரை ஒருவர் வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக காதலித்து அவ்வப்போது ரொமான்ஸில் மூழ்கி விடுவார்கள். அதிலும் மாடியில் டிவி ரிப்பேர் பண்ற பேர்ல ரெண்டு பேரும் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. இது தெரியாம கீழே இருந்து மனோரமா மற்றும் ஸ்ரீவித்யா ரன்னிங் கமெண்ட்ஸ் கொடுத்துட்டு இருப்பாங்க. ஆக மொத்தத்துல அப்பா படம் எடுக்க, அம்மா தயாரிக்க, மகன் நடிக்க நல்லதொரு குடும்பமாக ரசிகர்கள் பார்த்து என்ஜாய் பண்ணினார்கள்.

நாளைய தீர்ப்பு: எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தில் தான் விஜய் ஹீரோவாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தனாவை உருகி உருகி காதலிப்பார். அத்துடன் புரட்சிகரமான வேலைகளையும் பார்ப்பார். இதற்கிடையில் அவ்வப்போது விஜய்யை குதூகலப்படுத்த ரொமான்டிக் காட்சிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.

விஷ்ணு: எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு விஷ்ணு திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சங்கவி, ஜெய் சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அந்த காலத்து 90ஸ் கிட்ஸ்க்கு அடல்ட் படமாக இருந்திருக்கும். அதற்கு காரணம் இப்படம் முழுவதும் முத்த காட்சிகள், ரொமான்ஸ் சீன்கள் வைக்கப்பட்டு இளைஞர்களை சுண்டி இழுக்கும் படமாக அமைந்தது.