நாசருடன் காமெடியில் லூட்டி அடித்த வடிவேலின் 5 படங்கள்.. எம்டன்னை புரட்டி எடுத்த வைகை புயல்

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நகைச்சுவையின் மன்னனாக பெயர் பெற்றவர் தான் வடிவேலு. இவரது பேச்சால் மற்றும் உடல் அசைவுகள் போன்றவற்றால் நகைச்சுவையை கொடுத்து வைகைப்புயல் என்ற பட்டத்தை தட்டி சென்றார். அப்படிப்பட்ட இவர் நாசருடன் சேர்ந்து காமெடியில் லூட்டி அடித்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

சந்திரமுகி: பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு மற்றும் நாசர் நடித்தார்கள். இப்படம் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் மனநிலை அவ்வப்போது மாறுவதால் மருத்துவர் அதை சரி செய்யும் விதமாக கதை எடுக்கப்பட்டிருக்கும். இதில் நாசர், வடிவேலு சேர்ந்து செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Also read: முருங்க மரத்திலேயே குடி கொண்ட வேதாளம்.. வடிவேலுவால் செம கடுப்பில் இருக்கும் சந்திரமுகி-2 படக்குழு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை: வி.சேகர் இயக்கத்தில் 2000 ஆண்டு கூடி வந்தால் கோடி நன்மை திரைப்படம் வெளிவந்தது. இதில் நாசர், கரண், குஷ்பூ, ரோஜா, வடிவேலு, விவேக் மற்றும் கோவை சரளா ஆகியோர் நடித்தார்கள். இப்படம் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் வடிவேலு பாக்ஸர் கிருஷ்ணனாக நடித்திருப்பார்.

வசீகரா: கே.செல்வ பாரதி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வசிகரா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய், சினேகா, காயத்ரி ஜெயராம், வடிவேலு மற்றும் நாசர் ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தில் விஜய் பொறுப்பில்லாமல் மகிழ்ச்சியாக நாட்களை கழித்து கொண்டு இருக்கும் அவரை பொறுப்புடன் மாற்றுவதற்காக வெளியூர் சென்ற பின் அங்கே ஏற்படும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் நாசர் ரொம்ப கண்டிப்புடன் இருப்பார். வடிவேலு அவரிடம் வந்து எதிர்மறையாக காமெடி செய்யும் காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கும்.

Also read: சினேகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. அடையாளப்படுத்திய செல்வராகவனின் புதுப்பேட்டை

23ஆம் புலிகேசி : சிம்பு தேவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வெளிவந்தது. இதில் வடிவேலு. மோனிகா, தேஜாஸ்ரீ, மனோரமா, நாசர் ஆகியோர் நடித்தார்கள். இதில் நாசர் வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து வில்லத்தனமாக நடித்தாலும் கடைசியில் வடிவில் செய்யும் லூட்டிக்கு அளவே கிடையாது. இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

எம் மகன்: திருமுருகன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு எம் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் பரத், கோபி, நாசர், சரண்யா பொன்வண்ணன் மற்றும் வடிவேலு நடித்திருக்கிறார்கள். இப்படம் குடும்பங்களை கவரும் வகையில் ஃபேமிலி சென்டிமென்ட், காமெடி மற்றும் காதல் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இக்கதை எடுக்கப்பட்டிருக்கும். இதில் நாசர் எம்டன் கதாபாத்திரத்திலும், வடிவேலு எம்டனுக்கு மச்சான் கதாபாத்திரத்திலும் நடித்து இவர்களுக்கு இடையே ஏற்படும் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும்.

Also read: எம் மகன் என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்து காணாமல் போன திரு.. ஒரே படத்தால் ஊத்தி மூடிய சோகம்