விஜய் டிவியில் பிரியங்கா செய்த கலவரம்.. மணிமேகலைக்கு பதிலாக வரும் போட்டியாளர்

Vijay Tv: விஜய் டிவியை பொறுத்தவரை சீரியலை விட மக்களை பொழுதுபோக்கும் நிகழ்ச்சிகள் தான் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் கலக்கப்போவது யாரு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன், டான்ஸ் ஜோடி டான்ஸ், உங்களில் யார் பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து போட்டியாளர்களின் வளர்ச்சியை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போய் சேர்த்தது.

அதனால் தான் விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் அதில் கலந்து கொண்டு பிரபலமாக வேண்டும் என்று பல கலைஞர்களும் போட்டி போட்டு வருவதுண்டு. ஆனால் எல்லாவற்றிலும் கலப்படம் என்பதற்கு ஏற்ப விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளிலும் பிரச்சனை சிக்கல்கள் வர ஆரம்பித்து சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

அந்த வகையில் விஜய் டிவியில் ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார்கள். அப்படி வந்ததில் பிக் பாஸ் மற்றும் குக் வித்து கோமாளி நிகழ்ச்சி இரண்டுமே மக்களிடம் வெற்றி பெற்றது. அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 வரை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 வரப்போகிறது.

ஆனால் இதில் ஐந்தாவது சீசனில் தொகுத்து வழங்க வந்த மணிமேகலைக்கும், போட்டியாளராக வந்த பிரியங்காவுக்கும் நடுவில் மனக்கசப்பு ஏற்பட்டு விஜய் டிவியில் ஒரு பஞ்சாயத்து ஏற்பட்டுவிட்டது. அந்தப் பஞ்சாயத்தில் வழக்கம்போல் பிரியங்காவுக்கு சாதகமாக நடந்த நிலையில் மணிமேகலை நான் ஆங்கரிங் பண்ணவில்லை என்று பாதிலேயே போய்விட்டார்.

அத்துடன் பிரியங்கா செய்த கலவரத்தால் விஜய் டிவிக்கு குட் பாய் சொல்லி மணிமேகலை ஜீ தமிழுக்கு போய்விட்டார். இதனால் பல சர்ச்சைகளை சந்தித்த குக் வித்து கோமாளி நிகழ்ச்சியை மறுபடியும் வெற்றி அடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோமாளி மற்றும் சமையல் பண்ணக்கூடிய போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடத்தை நிரப்ப வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சௌந்தர்யாவை கோமாளியாக கூட்டிட்டு வருகிறார்கள். இவருடன் சேர்ந்து சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான ஷபானா மற்றும் உமர் போன்ற போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை 8மணி முதல் ஆரம்பமாகப் போகிறது.