கவர்ச்சிக்கு மறுப்பு சொன்னதால் ஒதுக்கப்பட்ட 6 நடிகைகள்.. நதியா முதல் எல்லாரும் செம ஆக்டிரஸ் ஆச்சே

தற்போதைய சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்கள் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பதற்கு தயார் என்று கூறி வருகிறார்கள் அதற்கு ஏற்றார் போல் பல முன்னணி நடிகைகளும் பிகினி உடையில் கூட தயக்கமில்லாமல் நடிக்கின்றனர்.

ஆனால் சில காலங்களுக்கு முன்பு வரை ஹீரோயின்கள் அனைவரும் இதுபோன்று கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்து கிடையாது. கவர்ச்சி காட்டுவதற்கு என்று தனியாக சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி உட்பட பல நடிகைகள் இருந்தனர். அப்படியே தேவை என்றால் சிறிது தயக்கத்துடனே நடிகைகள் கவர்ச்சியாக நடித்தார்கள்.

ஆனால் எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் அது போன்று நடிக்க மாட்டேன் என்று இருந்த நடிகைகளும் உண்டு. இதனால் அவர்கள் சினிமாவை விட்டு மிகக்குறுகிய காலத்திலேயே ஓரம் கட்டப்பட்டு தற்போது முற்றிலும் ஒதுங்கி விட்டனர். அவர்கள் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

சுவலட்சுமி: இவர் ஆசை என்ற திரைப்படத்தின் மூலம் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த இவர் அதன்பிறகு மிகவும் குடும்ப பாங்கான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடித்தார். அதில் லவ் டுடே போன்ற சில படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் பல திரைப்படங்கள் தோல்வியை மட்டுமே கொடுத்தது. மேலும் அவர் கவர்ச்சியான கேரக்டரை மறுத்ததாலும் சினிமாவை விட்டு தற்போது முற்றிலும் ஒதுங்கிவிட்டார்.

நதியா: 80 காலகட்ட இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நதியா மிகக்குறுகிய காலத்திலேயே சினிமா துறையை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இதற்கு முக்கிய காரணம் அவர் அதிக கிளாமர் காட்டி நடிக்காதது தான். எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று தைரியமாக கூறி சினிமா துறையை விட்டு விலகினார். பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிப்பில் களமிறங்கியிருக்கும் அவர் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

சித்தாரா: என்றும் அன்புடன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் அதன்பிறகு தங்கை, அண்ணி போன்ற கேரக்டரில் நடித்தார். ஹீரோயினாக இவர் கவர்ச்சி காட்ட மறுத்ததால் தான் அவருக்கு வந்த பல வாய்ப்புகள் பறிபோனது. அதன்பிறகு இவர் சில திரைப்படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வந்தார். தற்போது இவர் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

சங்கீதா: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் ஹீரோயினாக பூவேஉனக்காக உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த ஒரு திரைப்படங்களில் கூட கிளாமராக உடை அணிந்து நடித்தது கிடையாது. தற்போது இவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதற்கு இது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

இளவரசி: சம்சாரம் அது மின்சாரம் போன்ற பல திரைப்படங்களில் நாயகியாக குடும்ப பாங்காக நடித்த இவருக்கு சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கிளாமர் கேரக்டரை மறுத்து ஹீரோயினுக்கு அக்கா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வந்தார். இப்போது அவர் சினிமாவை விட்டு விலகி எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஜெயஸ்ரீ தென்றல் வந்து எண்ணை தொடு திரைபடத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். அவர் ஏற்று நடித்த அனைத்து திரைப்படங்களும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தான். சில காலங்களுக்குப் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகவே திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். அதன் பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மணல் கயிறு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார்.