டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்கள்.. முதலிடத்திற்கு வரும் புது சீரியல்

Vijay Tv Serial: தொலைக்காட்சி சேனலில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவியை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு விஜய் டிவியில் கிட்டத்தட்ட 14 சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது மக்கள் சன் டிவி சீரியல்களை விட விஜய் டிவியில் உள்ள சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்த்து வருகிறீர்கள்.

அதனால் தான் நிகழ்ச்சிகளை விட சீரியல்கள் புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

பாக்கியலட்சுமி: ஆயிரம் எபிசோடுகளை தாண்டிய நிலையிலும் கதை இல்லாமல் இழுத்து அடிப்பதற்கு முக்கிய காரணம் பாக்கியலட்சுமி சீரியலுக்கு எப்போதுமே ரசிகர்கள் பட்டாலும் ஒரு பக்கம் இருந்து வருவதால் அவர்களுக்காக இந்த சீரியலை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் எப்படியும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங் இல் வந்துவிடும். அதே மாதிரி இந்த வாரம் 4.56 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ஆஹா கல்யாணம்: கௌதம் பண்ணிய திருட்டு வேலைகள் அனைத்தையும் மகா வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியதால் ஐஸ்வர்யா, கௌதம் எனக்கு வேண்டாம் என்று வீட்டை விட்டு போவதற்கு முடிவெடுக்கிறார். ஆனால் தாத்தா பாட்டி ஐஸ்வர்யாவை வீட்டில் இருக்க வைத்து கௌதம் மற்றும் சித்ராவுக்கு தேவையான சொத்துக்களை கொடுத்து வெளியே அனுப்புவதற்கு பிளான் பண்ணி விட்டார்கள். இந்த வாரம் 5.02 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: குமரவேலு பிரச்சனை முடிந்த நிலையில் கதிர்காக நடனப் போட்டியில் ஆடி வெற்றி பெற்று இரண்டாவது பரிசை பெற வேண்டும் என்று நினைத்த ராஜியின் ஆசை நிறைவேற போகிறது. முக்கியமாக ராஜி இதெல்லாம் பண்ணுவது நமக்காக தான் என்று கதிரும் புரிந்து கொண்டார். அந்த வகையில் இவர்களுடைய புரிதல் ஒன்றாகி காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 6.37 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அய்யனார் துணை: இந்த சீரியல் புதுசாக வந்தாலும் வந்த கொஞ்ச நாளிலேயே மக்கள் மனதை கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றுவிட்டது. இந்த வாரம் 6.71 புள்ளிகளைப் பற்றி இரண்டாவது இடத்தில் இருந்தாலும் இனி அடுத்து வரும் வாரங்களில் முதல் இடத்திற்கு வந்து விடும்.

சிறகடிக்கும் ஆசை: ஒரு காலத்தில் எப்படி இருந்த சீரியல் இப்படி மாறிவிட்டது என்பதற்கு ஏற்ப சிறகடிக்கும் ஆசை சீரியல்தான் விஜய் டிவியின் ஃபேவரிட் சீரியலாக இருந்தது. ஆனால் தற்போது கதைகள் எதுவும் சொல்றபடி இல்லாததால் தட்டு தடுமாறி வருகிறது. அதனால் தான் மொத்தமாக டிஆர்பி ரேட்டிங்கில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் விஜய் டிவி சீரியல்களை பொறுத்தவரை சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் 7.13 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்திருக்கிறது.