சமந்தவை சிறையில் அடைக்க போர் கொடியை தூக்கிய சம்பவம்.. உச்சகட்ட வேதனையில் கொடுத்த பதிலடி

Samantha: நான் சும்மா இருந்தாலும் நம் வாய் சும்மா இருக்காது என்று சொல்வதற்கு ஏற்ப சமந்தா வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். அதாவது சமந்தா ஏற்கனவே சில ஆண்டுகளாக மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதை சரிப்படுத்தும் விதமாக ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு வந்தார். இடையில் ஒரு சில படங்களில் நடித்தாலும் அந்த படம் பெருசாக ரீச் ஆகாமல் தோல்வியை கொடுத்தது.

இதனால் மனவேதனையில் இருந்த சமந்தா மறுபடியும் உடல்நலத்தில் கவனம் செலுத்தலாம் என்று முழுமையாக குணமாவதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சமந்தா ஒரு youtube சேனலை உருவாக்கி அதன் மூலம் பாட்காஸ்ட் மூலம் மருத்துவத்தை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சில மருத்துவ ரீதியான ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வந்தார்.

சர்ச்சையில் சிக்கிய சமந்தா

ஆனால் இதுவே தற்போது சமந்தாவுக்கு ஒரு சிக்கலில் சிக்க வைத்து விட்டது. அதாவது சமந்தா ஹைட்ரஜன் பெராக்ஸைட் பயன்படுத்துவது குறித்து பேசிய நிலையில் இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. எந்த ஒரு மருத்துவ படிப்பும் இல்லாமல் வெறும் அனுபவத்தின் மூலம் மக்களுக்கு மருத்துவர் ரீதியாக ஆலோசனை கூறும் சமந்தா செய்வது மிகப்பெரிய தவறு என்று தி லிவர் டாக் (The Liver DoC) எனும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் கூறியிருக்கிறார்.

அதாவது சமந்தா கூறியது என்னவென்றால் மருந்து எடுத்துக் கொள்ளும் முன் ஒரு மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள். ஒரு வேலை அது உங்களுக்கு கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்து பாருங்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.

ஆனால் சமந்தா கூறிய இந்த ஆலோசனைக்கு மறுப்பு தெரிவித்து பதிவிட்ட தி லிவர் டாக் என்னும் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்துவது முற்றிலும் உடலுக்கு தீங்கானது. இப்படி ஒரு செலிப்ரிட்டியாக இருக்கும் சமந்தா கூறியதை மக்கள் எடுத்துக் கொண்டால் அது மிகப்பெரிய பிரச்சினையை உண்டாக்கும். அந்த வகையில் சமந்தா சொல்லிய ஆலோசனை மிகவும் தவறானவை என்றும் அதற்காக நிச்சயம் சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இணையத்தில் விமர்சித்திருக்கிறார்.

samantha (1)
samantha (1)

இதற்கு பதில் அளித்த சமந்தா, கடந்த இரண்டு வருடங்களாக மருத்துவ நிபுணர்கள் பரிந்துரையின்படி நான் பல மருந்துகளை உட்கொண்டு சிகிச்சை பெற்று வந்தேன். அவை அனைத்தும் மிகவும் விலை உயர்ந்த சிகிச்சை என்னால் அந்த சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடிந்தது. ஆனால் அதற்கு வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என அடிக்கடி நான் நினைத்தது உண்டு. அதனால் தான் மாற்று சிகிச்சை நோக்கி நான் விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். எனக்கு சிறப்பான முறையில் பயன் அளித்தது.

அது மட்டும் இல்லாமல் இதுவரை நான் சிகிச்சைக்கு செலவழித்த பணத்தைவிட ஒரு பகுதி மட்டும் தான் மாற்று சிகிச்சைக்கு செலவானது. அதனால் எல்லோருக்கும் பரிந்துரைக்க நினைத்தேன். போற போக்கில் எதையும் ஆராயாமல் நான் இதை செய்யவில்லை. நிபுணர்கள் உரிய ஆலோசனை கேட்டு நான் அதை முறைப்படி பயின்று பலன் பெற்ற பிறகுதான் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும் ஒரு மருத்துவர் நான் கூறிய கருத்துக்கு மாற்று கருத்தாக சில விமர்சனங்களை சொல்லிய நிலையில் கடுமையான வார்த்தைகளால் பேசி என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார். இதற்காக என்னை சிறையில் தள்ள வேண்டும் என்றெல்லாம் அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் நான் கவலைப்படவில்லை நான் கற்றதை என் அனுபவத்திலிருந்து ஒரு நல்ல விஷயத்துக்காக பரிந்துரைத்தேன். ஒருவேளை நான் பெரிய நடிகை என்பதால் என் மீது அவர் வன்மத்தை போட்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் சமந்தாவை பற்றி வெளியான தகவல்

Next Story

- Advertisement -