ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சைக்கோ கொலைகாரனோடு மோதும் சந்திரமுகி 2.. மரண பீதி கண்ணுலயே தெரியுது மாஸ்டர்

Chandramukhi 2: சில வாரங்களுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய சந்திரமுகி 2 வரும் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனாலேயே இப்போது படக்குழு தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்ப முயல்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் கோவில் கோவிலாக சென்று படம் நன்றாக ஓட வேண்டும் என்ற வேண்டுதலையும் வைத்து வருகின்றனர். அதில் தற்போது வாசு, லாரன்ஸ் மாஸ்டர், கங்கனா, மகிமா நம்பியார் ஆகியோர் ஹைதராபாத்தில் புகழ்பெற்ற பெத்தம்மா தல்லி கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

Also read: காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ட்ரெய்லர் பெரிய அளவில் பேசப்படாதது தான். ஏற்கனவே முதல் பாகம் ரஜினியால் மட்டுமே 800 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்ததாக பேசப்பட்டு வருகிறது. அது மறுக்க முடியாத உண்மையும் கூட.

மேலும் வேட்டையன் கதாபாத்திரம் மாஸ்டருக்கு பொருத்தம் இல்லை என்ற கருத்துக்களையும் சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது. அது மட்டுமின்றி இப்படம் வெளியாகும் அதே தேதியில் ஜெயம் ரவியின் இறைவனும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also read: இறைவனைப் பார்த்து மிரண்ட சென்சார் போர்டு.. முதன்முறையாக ஜெயம் ரவி படத்துக்கு கிடைத்த சர்டிபிகேட்

சைக்கோ திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இதன் ஸ்னீக் பீக் வீடியோ நேற்று வெளியாகி பார்ப்பவர்களை கொல நடுங்க வைத்தது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஒரு படி தூண்டிவிட்டது. சுருக்கமாக சொல்லப்போனால் சந்திரமுகி 2வை விட இறைவன் தான் வரவேற்பு பெரும் என்ற கணிப்புகளும் எழுந்துள்ளது.

அதனாலேயே மாஸ்டர் இப்போது மரண பீதியில் உறைந்து போய் இருக்கிறாராம். சூப்பர் ஸ்டார் சேர்த்த பெருமையை குறைக்காமல் இருக்க வேண்டுமே என்று இயக்குனரும் ஒருபுறம் பதட்டத்தில் உள்ளார். அந்த வகையில் இந்த இரண்டு படங்களில் எது பட்டையை கிளப்பும் என்பதை நாம் இன்னும் சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

Trending News