Vijay Sethupathy Visit To America For Viduthala 2: கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனாலேயே இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சூரி ஹீரோவாக நடித்த அப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் கெஸ்ட் ரோல் என்று சொல்லப்பட்ட அவருடைய கேரக்டர் இப்போது மெயின் ஹீரோ அளவுக்கு வளர்ந்து இருக்கிறது. அதிலும் இரண்டாவது பாகத்தில் இவருடைய பெருமாள் வாத்தியார் கேரக்டர் தான் ஃபிளாஷ்பேக் காட்சிகளாக விரிகிறது.
அதற்காக தயாராகி இருக்கும் விஜய் சேதுபதி பிப்ரவரி 20ஆம் தேதி அதன் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். மொத்தமாக இந்த பாகத்தில் அவருக்கு மூன்று சண்டை காட்சிகள் இருக்கிறதாம். அதை முடித்துவிட்டு அவர் மற்றொரு சர்ப்ரைஸுக்காக அமெரிக்கா செல்கிறார்.
Also read: 5 நிமிடங்கள் விடாமல் எழுந்த கரவொலி.. சர்வதேச அளவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த கௌரவம்
விடுதலை கதை மலை கிராம மக்களை பற்றியது. அப்படி இருக்கும் போது எதற்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று தோன்றலாம். ஆனால் அங்கு தான் விஷயமே இருக்கிறது. அதாவது இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அவர் 19 வயது போராளியாக வருகிறார்.
அதற்காக அமெரிக்கா செல்லும் அவருக்கு டி ஏஜிங் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் கோட் படத்திற்காக விஜய்க்கு கூட இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் சூப்பர் ஸ்டாரை இயக்க இருக்கும் லோகேஷும் தலைவருக்கு இப்படி ஒரு விஷயத்தை செய்ய இருக்கிறார்.
அந்த வரிசையில் வெற்றிமாறனும் டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறார். இது தற்போது ரசிகர்களுக்கு ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி என்றால் இந்த இரண்டாம் பாகம் நிச்சயம் தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Also read: வெற்றிமாறனின் சுற்றுலா செலவு இவ்வளவு? தயாரிப்பாளர் வாரி கொடுத்து தாஜா செய்ய இப்படி ஒரு காரணமா?