திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

சூப்பர் ஸ்டார் வெற்றிக்காக விஜய்யை ஃபாலோ செய்யும் தந்திரம்.. ஒரு இயக்குனரை உருவாக்க முடியலை

Super Star Following Vijay Strategy: ரஜினி கிட்டத்தட்ட 48 வருஷமாக சினிமாவில் ஹீரோவாக பயணித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிக்காத கதாபாத்திரங்களை கிடையாது. ஒவ்வொரு படத்திலும் தனக்கான ஸ்டைலை உருவாக்கி சூப்பர் ஸ்டாராக வெற்றி நடை போட்டு வருகிறார். அந்த வகையில் புது இயக்குனர்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இவரை வைத்து படங்களை எடுத்து பலரும் பெரிய இயக்குனர்களாக மாறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் சமீப காலமாக இந்த விஷயத்தில் துவண்டு போய்விட்டார் என்றே சொல்லலாம். அதாவது இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி எந்த ஒரு இயக்குனரையும் இவரால் உருவாக்க முடியவில்லை.

Also read: ரஜினி, லோகேஷுக்கு கொடுக்கும் தலைவலி.. சன் பிக்சர்ஸ்-சை விட இவர் தொல்லை தாங்க முடியல

அதற்காக வெற்றி பெற்ற இயக்குனர்களை தேடிப் பார்த்து அவர்களிடம் படத்தை பண்ணிக் கொண்டு வருகிறார். முக்கியமாக விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி வைக்கிறாரோ அவரையே பாலோ பண்ணி போகிறார். அந்த வகையில் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்த நெல்சன் இடம் ஜெயிலர் படத்தில் கமிட்டாய் வசூல் அளவில் சாதனை புரிந்தார்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் விஜய்யை வைத்து மாஸ்டர் மற்றும் லியோ படத்தை எடுத்ததால், தற்போது ரஜினியின் ஒட்டுமொத்த கவனமும் லோகேஷ் மீது திரும்பி விட்டது. அந்த வகையில் இவரை ரஜினி தனியாக கூப்பிட்டு எனக்காக ஒரு படத்தை பண்ணுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதனால் தான் தற்போது தலைவர் 171 படம் உருவாகப் போகிறது.

Also read: ரஜினி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் படத்தை தயாரித்த சின்ன நடிகர்.. ஒத்த பைசா இல்லாமல் இறந்து போன சோகம்

பொதுவாக எந்த ஒரு இயக்குனரும் கதை எழுதும் போது அதற்கான ஹீரோவை தன் மனதிற்குள் நினைத்து தான் எழுதவே ஆரம்பிப்பார்கள். அதன் பின்பு தான் அந்த ஹீரோவிடம் சொல்லி நடிக்க வைத்து வெற்றியை பார்ப்பார்கள். ஆனால் ரஜினி பொருத்தவரை எந்த ஒரு இயக்குனர் சமீபத்தில் வெற்றியை கொடுக்கிறாரோ அவரிடம் தானாகவே போய் எனக்கான படத்தை ரெடி பண்ணுங்கள் என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

என்னதான் சூப்பர் ஸ்டார் நம்பர் ஒன் இடத்தில் இருந்தாலும், சமீப காலமாக புது இயக்குனர்களை இவரால் உருவாக்க முடியவில்லை என்பதுதான் இவருடைய நிலைமை. அதற்கு பதிலாக விஜய்யை பாலோ பண்ணி வெற்றி பெறும் தந்திரத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த ஒரு விஷயம் இவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் நெருடலாக அமைகிறது.

Also read: ஆர்வக்கோளாறில் சன் பிக்சர்ஸ் செய்த மட்டமான வேலை.. எதிர்பார்ப்பை சுக்குநூறாக்கியதால் தலைவலியில் ரஜினி

Trending News