Theatre And OTT Release: கடந்த வாரம் வெளியான கருடன் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி என பலர் நடிப்பில் வெளியான படம் இதுவரை 20 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
அதைத்தொடர்ந்து இந்த வாரம் நான்கு படங்கள் தியேட்டரில் வெளியாகிறது. அதில் மோகன் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுத்துள்ள ஹரா வரும் ஜூன் 7 வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது.
அடுத்ததாக நீட் தேர்வு, அதனால் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அஞ்சாமை 7ம் தேதி வெளி வருகிறது. விதார்த், வாணி போஜன், ரகுமான் நடித்துள்ள இதன் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அரண்மனை 4 ரிலீஸ்
அதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அடுத்ததாக வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் வெப்பன் 7ம் தேதி வெளியாகிறது. இது தவிர புது முகங்கள் நடித்திருக்கும் எலிசாமி அதே நாளில் வெளியாகிறது.
ஓடிடி ரிலீசை பொருத்தவரையில் 4 படங்கள் வெளியாக இருக்கிறது. அதில் பரத், வாணி போஜன் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான மிரள் படத்தின் தெலுங்கு டப்பிங் 7ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகிறது.
மேலும் ஹன்சிகா நடிப்பில் 105 மினிட்ஸ், யோகி பாபுவின் பூமர் அங்கிள் இரண்டும் 7ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகிறது. அதேபோல் தெலுங்கு படமான லவ் மீ இதே தளத்தில் தான் ஏழாம் தேதி வெளியாகிறது.
இந்த வரிசையில் அரண்மனை 4 படமும் இந்த வாரம் வெளியாக இருந்தது. ஆனால் ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இப்படம் 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இப்படி நல்ல வரவேற்பை பெற்ற அரண்மனை 4 இந்த வருட கோலிவுட்டின் பிளாக்பஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த வாரம் வெளியாகும் படங்கள்
- Aranmanai 4 : ரெண்டே நாளில் 50 கோடி கிளப்பில் இணையுமா அரண்மனை 4.?
- நீட்டின் அவலத்தை தோலுரிக்கும் விதார்த்தின் அஞ்சாமை ட்ரைலர்
- விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரெய்லர் எப்படி இருக்கு