ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்த வார டிஆர்பி-யில் மாஸ் காட்டும் டாப் 6 சீரியல்கள்.. மற்ற சேனல்களை திணறடிக்கும் எதிர்நீச்சல்

TRP Ratings Of Tamil Serials: அனுதினமும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு போரடிக்காமல் நேரத்தை கடத்துவதற்கு சீரியல்தான் அவர்களின் நல்ல பொழுதுபோக்கு. அதிலும் தனியார் தொலைக்காட்சிகள் சுவாரசியமான கதைகளத்தில் புத்தம் புது சீரியல்களை தரை இறக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் 10-வது இடத்தில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை அழகாக காண்பிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது.

Also Read: திடீரென்று சீரியலில் இருந்து விலகி, சைலண்டா திருமணத்தை முடித்த சன் டிவி நடிகை.. வைரலாகும் கல்யாண புகைப்படம்

9-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலும், 8-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 7-வது இடத்தில் சிறகடிக்க ஆசை என்ற புத்தம் புது சீரியலும் உள்ளது. இதன் தொடர்ச்சியாக சீரியல் என்றாலே அது சன் டிவி தான். அந்த அளவிற்கு டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் மற்ற எந்த சேனல்களையும் உள்ளே விடாமல் சன் டிவியின் சீரியல்கள் தான் ஆக்கிரமித்து இருக்கிறது.

இதில் 6-வது இடத்தில் செம்பருத்தி சீரியல் பிரபலம் ஷபானா கதாநாயகியாக நடிக்கும் Mr. மனைவி சீரியலும், 5-வது இடத்தில் ஆலியா மானசா ஹீரோயின் ஆக நடிக்கும் இனியா சீரியலும் உள்ளது. அதை தொடர்ந்து 4-வது இடத்தில் வானத்தைப்போல சீரியலும், 3-வது இடத்தில் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரியும் உள்ளது. 2-வது இடத்தில் கயல் சீரியல் இருக்கிறது.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறிய மருமகள்.. மீண்டும் சுக்குநூறாக உடையும் குடும்பம்

பெரும்பாலும் முதல் மற்றும் இரண்டு இடத்திற்கு தான் கடும் போட்டி நிலவும். இந்த முறை கயலை பின்னுக்குத் தள்ளி எதிர்நீச்சல் முதலிடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் ஆணிவேராக இருக்கும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து சமீபத்தில் காலமானார். இவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை சன் டிவி தேடிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலிலும் எதிர்நீச்சல் சீரியலில் இருக்கும் மற்ற நடிகர்கள் தங்களுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி டிஆர்பி-யில் தொடர்ந்து முதல் இடத்தை விட்டுக் கொடுக்காமல் மற்ற சேனல்களை எல்லாம் திணறடிக்கிறது.

Also Read: இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே

Trending News