வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லண்டனுக்குப் பறந்த நாய் சேகர்.. வடிவேலுக்கு ஜோடியாக இத்தனை நடிகைகளா.?

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக வலம் வந்த வடிவேலு,  பல காரணங்களால் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். தற்போது பிரச்சனைகள் முடிந்த பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்ல ஹீரோவாக.

அந்த வகையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. வடிவேலு தவிர படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இருப்பினும் சமீபத்தில் படத்திற்கான பூஜை நடந்து முடிந்தது. இந்நிலையில் பாடல் உருவாக்கத்திற்காக நாய் சேகர் படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளார்களாம். அதன்படி வடிவேலு, இயக்குனர் சுராஜ், லைகா உமேஷ் குமார் ஆகியோர் லண்டனில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

vadivelu london
vadivelu london

ஆனால் படக்குழுவினர் பாடல் உருவாக்கத்திற்காக லண்டன் செல்லவில்லையாம். லைகா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் லண்டனில் கிறிஸ்துமஸ் பார்ட்டி கொடுக்கிறாராம். அதில் கலந்து கொள்ளவே வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பார்ட்டி மட்டுமல்லாமல் படத்திற்காக ஒரு 8 வெளிநாட்டு நடிகைகளை தேர்வு செய்யவும் உள்ளார்களாம். பார்ட்டிக்கு போன மாதிரியும் ஆச்சு படத்துக்கு ஆள் தேடுன மாதிரியும் ஆச்சு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல் படக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலு நடிப்பில் உருவாகும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Trending News