சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தமிழில் என்னை யூஸ் பண்ணிக்க ஆளில்லை.. கும்பிடு போட்டு கிளம்பிய வரலட்சுமி

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். ஆரம்பத்தில் உருவ கேலிக்கு உள்ளான வரலட்சுமி சரத்குமார் தற்போது மிகப் பெரிய நடிகையாக உருவெடுத்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தமிழில் விஜய்யின் சர்கார், விஷாலின் சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்தாலும் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் வரலட்சுமியின் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு அவருக்கான கதாபாத்திரங்கள் அமையவில்லை என்ற வருத்தம் அவருக்கு நீண்ட நாளாகவே இருக்கிறதாம்.

ஆனால் தமிழுக்கு மாறாக தெலுங்கில் அவருக்கு ஏகப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. தெலுங்கில் வரலட்சுமியின் நடிப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். தெலுங்கில் வரலட்சுமி நடிக்கும் படங்கள் தொடர் வெற்றியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும் தெலுங்கில் அவருக்கு வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரங்களும் கிடைத்து வருவதால் அவருடைய நடிப்பும் மெருகேறிக் கொண்டே செல்கிறது எனவும், தற்போதைக்கு தெலுங்கு சினிமாவை பொறுத்தவரையில் வரலட்சுமி நடித்தால் அந்த படம் சூப்பர் ஹிட் என அனைத்து தயாரிப்பாளர்களும் நம்பிக்கை கொடுத்து விட்டாராம்.

தமிழில் நிலைத்த அளவு சாதிக்க முடியாத வரலட்சுமி விரைவில் ஹைதராபாத்தில் செட்டிலாகப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதே படத்தில் தான் விஜய் சேதுபதியும் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தமிழில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிக்க தயாராகத்தான் இருக்கிறாராம் வரலட்சுமி சரத்குமார்.

varalaxmi-sarathkumar-cinemapettai
varalaxmi-sarathkumar-cinemapettai

Trending News