ஈரம் கூட்டணியின் அடுத்த மேஜிக்.. உயிரை உறைய வைக்கும் சப்தம் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Sabdham Trailer: அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடித்திருந்த ஈரம் படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. வெறும் தண்ணீரை வைத்தே பார்வையாளர்களை பயத்தில் உறைய வைத்திருந்தது அப்படம்.

தற்போது அதே கூட்டணியில் சப்தம் உருவாகி இருக்கிறது. படத்தின் தலைப்பை பார்த்ததுமே சவுண்ட் தான் கதை கரு என்பது தெரிந்திருக்கும்.

அந்த வகையில் சப்தத்தை வைத்தே திகில் கிளப்ப முடியும் என்பது போல் வெளியாகி இருக்கிறது ட்ரெய்லர். ஆதி, லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா என பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

சப்தம் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஆயிரம் வவ்வால் காதில் கத்துவது போல் இருக்கு என்ற வசனத்தோடு தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காட்சியும் மிரட்டல் தான்.

இதில் ஆதி காது கேக்காத அல்ட்ரா சவுண்ட் வைத்து சுற்றி நடக்கும் மர்மத்தை கண்டறிய முயற்சி செய்கிறார். ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது என்பது போல் சம்பவங்கள் நடக்கிறது.

இப்படியாக மிரட்டல் பின்னணி இசையுடன் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வரும் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம் நிச்சயம் திகில் பிரியர்களுக்கான பெரும் ட்ரீட்.

Leave a Comment