புது மாதிரி டெக்னாலஜியில் ரீ என்ட்ரி ஆகும் ரஜினியின் சில்வர் ஜூப்ளி படம்.. ட்ரெண்ட்டாகும் டீசர்

டாப் நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்ட் ஆகிவிட்டது. இந்த மாதம் எட்டாம் தேதி கமலின் ஆளவந்தான் படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதை தொடர்ந்து இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியும் தன்னுடைய பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடுவதால் 25 வருடத்திற்கு முன்பு ஹிட்டான படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.

இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் ஹைபை ட்ரீட் ஆக பார்க்கப்படுகிறது. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் ரஜினி, மீனா நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தான் முத்து.

இந்த படம் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபீசை மிரள விட்டது. அதிலும் குறிப்பாக ஜப்பானில் இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் எல்லாம் இன்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல்களின் லிஸ்டில் இருக்கிறது.

Also read: 2 ஜாம்பவான்களை தாக்கி தான் வெற்றி பெற்றாரா படையப்பா? கொளுத்தி போட்டு குளிர் காயும் இயக்குனர்

முத்து படத்தின் டீசர்

இந்த நிலையில் கமலின் ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆகும். அதே சமயத்தில் முத்து படத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ரிலீஸ் செய்கின்றனர். முத்து படத்தை 4k டெக்னாலஜியில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தோடு கொல மாஸ் ஆக ரீ ரிலீஸ் செய்கின்றனர்.

இதற்கான ப்ரோமோஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் முத்து படத்தை குறித்த அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அது மட்டுமல்ல இந்த படத்தின் புதிய டீசரையும் பட குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் ட்ரெண்ட் ஆகிறது.

முத்து படத்தின்  டீசர் இதோ!   

Also read: 2023ல் வசூல் வேட்டையாடிய டாப் 5 மூவிஸ்.. 72 வயதிலும் நான்தான் No.1-ன்னு நிரூபித்த ரஜினி