சாமானியன் ட்ரெய்லர்.. அட்ரா சக்க! பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்த ராமராஜன்

Ramarajan : ராமராஜன் நடிப்பில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்ற படம் வெளியானது. அதன்பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து ராமராஜன் ஹீரோவாக நடித்துள்ள சாமானியன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

இப்படம் ராகேஷ் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் உருவாகி இருக்கிறது. பெரும்பாலும் சின்னத்திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் ராதாரவி மற்றும் எம்எஸ் பாஸ்கர் வில்லன்களாக நடித்துள்ளனர்.

சாமானியன் ட்ரெய்லர்

ஆரம்பத்திலேயே உலகில் ஏழை, பணக்காரன், கீழ் ஜாதி, மேல் ஜாதி என எதுவுமே கிடையாது. இங்க ரெண்டே சாதி தான். இங்க ஒருத்தவன் பணம் வாங்குறவன், இன்னொருத்தவன் பணம் கொடுக்கிறவன் என்று ராதா ரவியின் டாயலாக் உடன் தொடங்குகிறது.

மேலும் இந்த காலத்து தலைமுறையினருக்கு அறிவுரை சொன்னால் பிடிக்காது, தப்புன்னு தெரிஞ்சும் அறிவுரை சொல்லாமல் இருப்பது எனக்கு பிடிக்காது என ராமராஜன் என்ட்ரி கொடுக்கிறார்.

அதாவது பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கும்பல் இருக்கிறது. அதை கண்டுபிடிக்க ஒரு சாமானியனாக இறங்குகிறார் ராமராஜன். இந்த படம் அவருக்கு எந்த அளவுக்கு கம்பேக் கொடுக்கும் என்பது படம் வெளியானால்தான் தெரியவரும்.

ஆனால் ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போது ரசிகர்களை பெரிதாக பல விஷயங்கள் கவர்ந்திருக்கிறது. ஆகையால் எப்போது சாமானியன் படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. மேலும் பழைய பன்னீர்செல்வமாய் மீண்டும் திரும்பி வந்துள்ளார் ராமராஜன்.

Leave a Comment