இது ராஜா கதை இல்ல நம்ம வீட்டோட கதை.. சித்தார்த் 40 டைட்டில் டீசர் எப்படி இருக்கு.?

Siddharth: சித்தா படத்தின் வெற்றியால் சித்தார்த் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டார். அதன் படி ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 40வது படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த டீசரின் ஆரம்பத்திலேயே இது ராஜா கதை இல்ல எங்க வீட்டோட கதை என சித்தார்த் கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து அழகான குடும்ப உறவை காட்டுகிறது இந்த வீடியோ. நடுத்தர வர்க்கத்து குடும்ப தலைவராக சரத்குமார் அவரின் மனைவியாக தேவயானி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்துள்ளனர்.

அவர்களின் மகனாக சித்தார்த் மகளாக மீதா ரகுநாத் இருக்கின்றனர். இவர்களின் கனவுதான் இந்த படத்தின் கதை என்பது டீசரில் தெரிகிறது.

சித்தார்த் 40 டைட்டில் டீசர் எப்படி இருக்கு.?

ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களுக்கும் சொந்த வீடு என்பது பெரும் கனவு. அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு 3BHK என பெயரிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சாதாரண குடும்பத்திற்கும் அசாதாரணமான ஒரு கதை உண்டு என்பது போல் இருக்கிறது இந்த டீசர். வரும் சம்மருக்கு வெளியாக இருக்கும் இப்படம் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Comment