காதுக்கும் நெத்தி பொட்டுக்கும் ரெண்டு இன்ச் தான் கேப்பு.. பிறந்தநாளுக்கு பார்ட்டி வச்சு மிரள விட்ட சியான் 62 டைட்டில் வீடியோ

vikram : இன்று காலை முதலே எக்ஸ் தளத்தில் விக்ரம் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறார். அதாவது விக்ரம் தனது 58 வது பிறந்தநாள் இன்று கொண்டாடும் நிலையில் அவருடைய படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அதன்படி பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்துள்ள நிலையில் இப்படத்தின் வீடியோ ஒன்றை இன்று படக்குழு வெளியிட்டு இருந்தது. அடுத்ததாக விக்ரமின் 62 ஆவது படத்தை எஸ்யு அருண்குமார் இயக்க உள்ளார்.

இப்படத்தை ரியாஸ் ஷிபு தயாரிக்கும் நிலையில் சியான் 62 படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. மேலும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சியான் 62 படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டு

இன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சியான் 62 படத்தின் டைட்டில் வீடியோ வெளியிட்டு உள்ளது. அதன்படி இப்படத்திற்கு வீரதீர சூரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளி உலகத்திற்காக பொட்டிக்கடை நடத்துகிறார் விக்ரம்.

வீர தீர சூரன்

veera-dheera-sooran
veera-dheera-sooran

மேலும் அவரை தாக்குவதற்காக ரவுடிகள் சுற்றிவளைத்த நிலையில் மல்லிகை பொருளில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை தும்சம் செய்கிறார். மேலும் காதுக்கும் நெத்தி போட்டுக்கும் ரெண்டு இன்ச் தான் கேப்பு என வசனமும் தெறிக்க விடுகிறார்.

இப்படம் பக்கா ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக உருவாக இருக்கிறது. ஆகையால் சாமி பட ஸ்டைலில் வீர தீர சூரன் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.