கண்ணு முன்னாடியே செய்யணும், ரத்தம் தெறிக்கனும்.. ஆக்ரோஷ ஆக்சனில் விமலின் துடிக்கும் கரங்கள் ட்ரெய்லர் தேறுமா?

Thudikkum Karangal Trailer: விமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதை தொடர்ந்து தற்போது அவர் துடிக்கும் கரங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார். வேலுதாஸ் இயக்கத்தில் அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஆக்சன் அதிரடியாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லரில் விமலின் ஆக்ரோஷ தாண்டவம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணின் மரணம் தொடர்பான காட்சிகள் தான் காட்டப்படுகிறது.

Also read: மார்க்கெட் இல்லாமல் தவித்த விமல் .. அடுத்தடுத்து ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும் 7 படங்கள்

அதை தொடர்ந்து போலீஸ் விசாரணை, விமலின் ரொமான்ஸ், ஆக்சன் என ட்ரெய்லர் முழுவதும் பரபரப்பாக நகர்கிறது. அதிலும் கண்ணு முன்னாடியே செய்யணும், ரத்தம் தெறிக்கணும், தப்பு யார் செஞ்சு இருந்தாலும் அவங்க தப்பானவங்க தான் போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கிறது.

இதிலிருந்தே படம் எந்த மாதிரியான கதைகளம் என்பதும் புரிகிறது. அதிலும் விமல் இதில் காட்டியிருக்கும் ஆக்ரோச முகம் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும் சதீஷ், சுரேஷ் மேனன் ஆகிய கதாபாத்திரங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் விமல்.. டேமேஜ் ஆன பெயரை தூக்கி நிறுத்த போட்ட பிளான்

இவ்வாறு அதிரடியாக வெளிவந்திருக்கும் துடிக்கும் கரங்கள் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் விமலுக்கு இது திருப்புமுனையாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் இப்படம் தேறுமா, தேறாதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.