வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நீ ஒரு பரதேசி, ராதாரவியை வெட்டியான் என பதிலடி கொடுத்த நடிகர்.. பொது இடத்தில் இப்படியா சண்டை போட்டுப்பீங்க!

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு ஏதேனும் உதவிகள் பிரச்சனைகள் என்றால் நடிகர் சங்கத்தை நாடலாம் என்பதற்காகவே எம்.ஜி.ஆர் அவர்கள் 1952 ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தை நிறுவினார். ஆனால் அந்த சங்கமே பிரச்சனையாக உள்ள நிலையில், அச்சங்கத்தில் உள்ளவர்களே மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர்.

இதில் முக்கியமாக நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிவிட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். அதை போலவே தற்போது நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Also Read : 15 வயது வித்தியாசம், அருண் விஜய்யின் அண்ணியை திருமணம் செய்யும் விஷால்.. வயசானாலும் தரமான செலெக்ஷன்

இதனிடையே 20 வருடங்களுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் தலைவராகவும், செயலாளராகவும் இருந்த நடிகர் ராதா ரவி, விஷாலை மேடை கிடைக்கும் இடத்தில் எல்லாம் வெளுத்து வாங்குவார். இதனிடையே அண்மையில் விஷாலை பரதேசி நாய் என ராதாரவி சாடினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்மையில் மேடையில் பேசிய விஷால், என்னை நாய் என சொல்லி கொண்டிருந்த ராதாரவி, தற்போது பரதேசி நாய் என கூறி என்னை மேன்மைப்படுத்தி உள்ளார் என சிரித்துக்கொண்டே கலாய்த்தார்.

Also Read : பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி

நடிகர் சங்கத்தை கட்டுங்கள் என நாங்கள் பல முறை ராதாரவி பதவியில் இருக்கும் போது வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. அதனால் தான் நாங்கள் தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் உருவானது. இப்போது நாங்கள் கட்டிடத்தை கட்டி வருகிறோம். இருந்தாலும் ராதாரவி எங்களை வஞ்சித்தே வருகிறார் என விஷால் காட்டமாக தெரிவித்தார்.

ஒரு சிலர் ராதாரவி அனைத்து சாவிற்கும் சென்று வருபவர் என தெரிவிக்கிறார்கள். அனைத்து சாவிற்கு செல்பவர்கள் வெட்டியான் என்று அழைக்கப்படுவார்கள். ராதாரவி அப்படிபட்டவரா என்று தனக்கு தெரியவில்லை, இருந்தாலும் தான் உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கு மட்டுமே உதவ ஆசைப்படுகிறேன். இல்லாத மனிதனுக்கு உதவுவது உதவியாக இருக்காது, பெருமைக்காக இருக்கும் என விஷால் தெரிவித்துள்ளார்.

Also Read : உதயநிதி பெயரை சொல்லி தப்பிக்கும் விஷால்.. பொங்கி எழுந்து முடிவு கட்ட நினைத்த தயாரிப்பாளர்

Trending News