மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஷாலுக்கு சமீபகாலமாக நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் 2018 ஆம் ஆண்டு எஸ்பி மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை திரைப்படம் தான் கடைசியாக விஷால் கொடுத்த வெற்றி படம்.
அந்தப் படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் அடுத்தடுத்த வெளியான சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்சன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற 6 படங்களும் படுதோல்வியை சந்தித்து மண்ணை கவ்வியது.
Also Read: என்னது விஷால் விஷயத்துல அப்படி ஒரு சம்பவமே நடக்கலையா? பகீர் கிளப்பி, அந்தர் பல்டி அடித்த நடிகை
இப்படி தொடர் தோல்வியை சந்தித்த விஷால் நிச்சயம் அடுத்து வெற்றி வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் விஷால் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளதால், இந்தப் படத்தின் மூலம் விஷால் வாகை சூட வெறிகொண்டு காத்திருக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. மேலும் இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதில் மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழும் விஷால் சில காரணங்களினால் போலீஸ் பதவியை இழக்கிறார்.
Also Read: லோகேஷை பார்த்து பொறாமையில் பொங்கிய விஷால்.. லத்தி பட விளம்பரத்தில் போட்ட பெரிய ஸ்கெட்ச்
அதன் பிறகு மகனின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் போலீசில் சேர்கிறார். மேலும் இப்படத்தில் ரவுடிகளை தனது கையில் இருக்கும் லத்தியால் வெளுத்து வாங்குகிறார். போலீஸ் கையில் லத்தி கொடுத்து உயர் அதிகாரிகள் அடிக்க சொன்னால் அது ஆர்டர் இல்லை, ஆஃபர் என வசனங்களை விஷால் தெறிக்க விடுகிறார்.
இந்த ட்ரெய்லரில் யுவன் சங்கர் ராஜா பிஜிஎம் வேற லெவலில் வொர்க் அவுட் ஆகியுள்ளது. விஷால் லத்தி படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம். அதுமட்டுமின்றி இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
Also Read: விஜய்யின் சோலியை முடிக்க திட்டம் தீட்டிய விஷால்.. வலையில் சிக்குவாரா தளபதி
ஆகையால் விஷாலின் திரை வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். லத்தி படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகி 4 வருடங்களுக்குப் பிறகு விஷால் வெற்றியை ருசிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.