Thalapathy Vijay: விஜய் ரசிகர்கள் எப்போ எப்போன்னு காத்துகிட்டு இருந்த அந்த நாள் வந்தாச்சு. விஜய் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தருகிறார் என்பதை தாண்டி அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் பேசப் போகும் முதல் மேடை இது.
மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கடந்த வருடத்திலிருந்து இந்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறார். போன வருஷம் விஜயுடன் செல்பி எடுப்பது, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது என மாணவர்கள் செய்த அலப்பறை அதிகம்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆசைக்கு ஏற்ப விஜய் அத்தனை விஷயங்களையும் செய்தார். ஆனால் இந்த வருடம் மாணவர்களுக்கு உள்ளே செல்போன் அனுமதியில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.
இதனால் இதுபோன்ற செல்பி கொண்டாட்டங்கள் எல்லாம் இருக்குமா என்பது சந்தேகம்தான். வெள்ளை சட்டை அணிந்த ஸ்மார்ட் ஆக அரங்கத்திற்குள் வந்த விஜய்க்கு மாணவர் ஒருவரின் அம்மா செந்தூரப் பொட்டு வைத்து விட்டார்.
இதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் நான்கு நேரில் சாதிய பிரச்சனையால் வன்முறை ஆளாக்கப்பட்ட மாணவனின் அருகில் ஆறுதலாக விஜய் அமர்ந்திருந்தது எல்லோருடைய மனதையுமே நெகிழ்ச்சி அடைய செய்தது.
விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்த உடனேயே மாணவர்களுக்கு வயிறார சாப்பாடு போட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் எல்லா ஏற்பாடும் செய்து விட்டார்கள். தற்போது அந்த சாப்பாடு மெனுவின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.
மாணவர்களுக்கான சிறப்பு விருந்தில் என்னென்ன ஸ்பெஷல் இருக்கிறது என பார்க்கலாம். சாப்பாடு, வடை, அப்பளம், அவியல், மோர், வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரக் கறி, ஆனியன் மணிலா, வத்த குழம்பு, கதம்ப சாம்பார் மற்றும் தக்காளி ரசம் இடம்பெறுகின்றன.