திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித்தை பிடிக்காமலேயே எடுத்த படம், கேரியர் முடிந்து போன இயக்குனர்.. பின் விஷால் கொடுத்த மரண ஹிட்

Ajithkumar: அஜித்தை பிடிக்காமல் அந்த படத்தை எடுத்தேன் என இயக்குனர் ஒருவர் கொடுத்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்தை பற்றி இயக்குனர் அப்படி கமெண்ட் செய்திருப்பது ரொம்பவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம் தான்.

பெரிய நடிகர்களை இயக்க இயக்குனர்கள் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அஜித்தை இயக்குவதற்கு எனக்கு சம்மதமே இல்லை என ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

ரன், சண்டைக்கோழி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது ஃபீல்ட் அவுட் இயக்குனராக இருக்கிறார். அதனால் தான் என்னவோ ரொம்ப தைரியமாக முன்னணி நடிகர்களை பற்றி பேசுகிறார். ரன் படத்தின் பெரிய கிட்டிற்கு பிறகு ஜி படத்தை லிங்குசாமி இயக்குனர்.

அஜித்தை பிடிக்காமலேயே எடுத்த படம்

இந்த படத்தின் கதை முதலில் ரஜினிக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் என் கதைக்கு இளமையான ஒரு நடிகர் தான் வேண்டும் என ரொம்பவும் தைரியமாக சொல்லிவிட்டார் லிங்குசாமி. அதன்பின் இந்த கதை பிடித்து அஜித் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தார்.

சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களும் அஜித் முன்வந்து இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லும் போது அந்த வாய்ப்பை மிஸ் பண்ணி விடாதே என அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதனாலேயே அஜித்துடன் இந்த படத்திற்கு ஒப்பந்தமாக இருக்கிறார் லிங்குசாமி.

ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து லிங்குசாமிக்கு எதுவுமே பிடிக்கவில்லையாம். அதற்கு ஏற்றது போல் படம் தோல்வி அடைந்து விட்டது. ரன்னுக்கு பிறகு லிங்குசாமிக்கு பேர் சொன்ன படம் என்றால் சண்டக்கோழி தான்.

மேலும் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாக இருந்த விஷாலை ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தான் லிங்குசாமி. இன்று வரை அவரால் இந்த வெற்றிக்கு ஈடாக ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை.

Trending News