திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விழி பிதுங்கி நிற்கும் நெல்சன்.. ஜெயிலர் படத்தில் கோர்த்துவிடும் ரஜினி

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். ஆரம்பத்தில் பீஸ்ட் படத்தின் விமர்சனத்தினால் ரஜினி இந்த படத்தில் நடிக்க தயங்கி வந்த நிலையில் கடைசியாக ஒரு வழியாக சம்மதித்தார். ஆனால் கதையில் ரஜினி பல மாற்றங்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் சில தினங்களாக இந்த படத்தில் இடம் பெற்ற நடிகர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரை தொடர்ந்து நேற்று தமன்னாவின் புகைப்படமும் வெளியானது.

Also Read : ரஜினி காலில் விழும் எஸ் ஏ சி.. விஜய் தனது அப்பாவை வெறுக்க இப்படி ஒரு காரணமா.!

மேலும் ஜெயிலர் படத்தில் இன்னும் ஏகப்பட்ட பெரிய பிரபலங்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக ரஜினி தன்னுடைய படத்தில் மற்ற ஹீரோக்கள் நடிப்பதை விரும்ப மாட்டார். ஆனால் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

அதுமட்டுமின்றி கமலின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய இண்டஸ்ட்ரியல் ஹிட் விக்ரம் படம் கொடுத்துள்ளது. ஆகையால் விக்ரம் படத்தைப் போல ஜெயிலர் படத்தையும் பான் இந்தியன் படமாக மாற்ற வேண்டும் என நாளுக்கு நாள் ரஜினி ஒவ்வொரு நடிகரை படத்தில் கோர்த்து விட்டு வருகிறாராம்.

Also Read : 33 வயது நடிகையை ரஜினிக்கு வில்லியாக்கும் நெல்சன்.. 4 ஸ்டேட்டிலும் மாட்டி விடும் சன் பிக்சர்ஸ்

எனவே நெல்சன் எழுதிய கதையை தாண்டி இப்போது ஜெயிலர் படத்தின் கதை பெரிதாகிக் கொண்டே போகிறதாம். யாருக்கு என்ன கதாபாத்திரம் கொடுப்பது என்று தெரியாமல் இப்போது நெல்சன் விழி பிதுங்கி நிற்கிறாராம். இதனால் கதையில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாம்.

மேலும் மோகன்லால், சிவராஜ்குமார் என மற்ற மொழி சூப்பர் ஸ்டாருகளும் ஜெயிலர் படத்தில் நடிப்பதால் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் யார் என்ற பிரச்சனை வரவும் வாய்ப்புள்ளது. இதையெல்லாம் சரி கட்ட வேண்டும் என்று ரஜினி ஜெயிலர் படத்தில் தன்னுடைய முழு கடின உழைப்பையும் போட்டு வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read : சின்னத்திரையின் TRPயை எகிற வைக்கும் 5 படங்கள்.. தொலைக்காட்சியில் பட்டையை கிளப்பும் ரஜினி படம்

Trending News