பாக்யராஜ் ஸ்டைலில் அமையாத ஒரே படம்.. சில்வர் ஜூப்ளியை மிஸ் செய்த திரைக் காவியம்

பொதுவாகவே பாக்யராஜ் என்றால் அவருடைய நக்கல், நையாண்டியான திரைப்படங்களும், வசனங்களும் தான் மக்களுக்கு நியாபகம் வரும். இந்த ஸ்டைல் பாக்யராஜுக்கு மட்டும் அல்லாமல் அவருடைய உதவி இயக்குனர்களாக இருந்த பார்த்திபன், பாண்டியராஜனுக்கு கூட உண்டு.

பாக்யராஜ் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பாரதி ராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில் படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர், சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் 2,3 காட்சிகளில் நடித்திருப்பார். பின்பு பாரதிராஜா இவரை புதிய வார்ப்புகள் என்னும் படத்தில் திரைக்கதை ஆசிரியராக மட்டுமல்லாமல் நாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.

இயக்குனர் பாரதிராஜா திரைப்படங்களில் குடும்ப சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும், மேலும் இவர் இது போன்ற கதைகளுக்கே பிரபலமானவர். அதிரடி மர்மங்கள் நிறைந்த விடியும் வரை காத்திரு என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற படங்கள் பாக்யராஜின் அடுத்தடுத்த வெற்றி படங்கள் ஆகும்.

பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. 25 வாரங்களுக்கு மேல் திரையில் ஓடி வெள்ளிவிழா கண்டது. பாக்யராஜ் இந்த திரைப்படத்தில் தான் ஊர்வசியை அறிமுகப்படுத்தினார். அவருடைய முருங்கைக்காய் லாஜிக்கும் இந்த படத்தில் இருந்து தான் வந்தது.

இந்த அனைத்து படங்களில் இருந்தும் வித்தியாசமாக எடுக்கப்பட்டது தான் பாக்யராஜின் முதல் படமான ‘ சுவர் இல்லாத சித்திரங்கள்.’ பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தின் கதையை மையமாக கொண்ட திரைப்படம். இந்த படம் அதிக செண்டிமெண்ட் காட்சிகளை கொண்டது. இதில் சுதாகர், சுமதி, கவுண்டமணி, பாக்யராஜ் நடித்திருந்தனர். 1979 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்து இருந்தார். இந்த படம் அவ்வளவாக பாக்யராஜுக்கு கை கொடுக்கவில்லை. எனவே தான் பாக்யராஜ் தன்னுடைய ரூட்டை மாற்றி காமெடி படங்களை எடுக்க ஆரம்பித்தார்.