Indian 2 : ரிலீஸ் தேதியில் இருந்து ஜகா வாங்கிய இந்தியன் 2.. அண்ணன் எந்திரிச்சதும் திண்னையை பிடித்த டாப் 3 ஹீரோக்கள்

Indian 2 release date: அண்ணன் எப்போ எந்திரிப்பான் தின்ன எப்போ காலி ஆகும்னு ஒரு சொலவடை இருக்குது. அது கடைசியில இந்தியன் 2 மூவிக்கு தான் சரியான பொருத்தமா அமைஞ்சிருக்கு. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கு ஏற்ற மாதிரி இந்தியன் 2 ஆரம்பிச்சதிலிருந்தே பிரச்சனை தான்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க நினைத்த கமலுக்கும், இயக்குனர் சங்கருக்கும் அதுவே சோதனை காலமாக மாறிவிட்டது. 60% படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஒரு பக்கம் உயிரிழப்பு நேர்ந்த மனக்கவலை, இன்னொரு பக்கம் விசாரணை என இந்தியன் 2 பட குழுவுக்கு சோதனையாக அமைந்தது. அதை முடித்து வெளியே வரலாம் என்று பார்த்தால் கொரோனா ஊரடங்கு. அப்படியே ஒன்றரை வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

60% படப்பிடிப்பை வேகமாக முடித்த படக்குழுவினால் 40% படப்பிடிப்பை முடிக்க முடியவில்லை என்பதுதான் பெரிய கூத்து. ஒரு பக்கம் கமல் அவருடைய படங்களில் பிசியாக இருக்க, இன்னொரு பக்கம் ஷங்கர் ராம்சரனை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் பிறகு ஒரு வழியாக படத்தை முடித்துவிட்டு பார்த்தால், அட இந்த கதையை வைத்து இரண்டு படத்தோட கதையை எடுத்துலா என்ற அளவுக்கு இஷ்டத்துக்கு எடுத்து வைத்திருந்தார்கள். இதைத் தொடர்ந்து மீதி இருக்கும் காட்சிகளை வைத்து இந்தியன் 3 யை உருவாக்க திட்டமிடப்பட்டது.

அதுக்காக இந்தியன் 2ல சில மாற்றங்கள் செய்தார்கள். படமும். ஜனவரிக்கு ரிலீஸ் ஆகும் என்று முதலில் சொல்லப்பட்டது. அதன் பின்னர் ஏப்ரலுக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. எலக்சன் நேரத்துல ரிலீஸ் பண்ண முடியாது என்ற உடன் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் மாற்றினார்கள்.

இதனால் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக இருந்த நிறைய படங்கள் ஒத்திவைக்கப்பட்டது. கமலுடன் மோதி ஏன் வசூலை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பயம் தான். கடைசியில பார்த்தா இப்போ இன்னும் ஒரு பாடல் காட்சி மீதி இருக்கு, அதை எடுத்து முடிச்சா தான் ரிலீஸ் பண்ண முடியும்னு சொல்றாங்க. ஒரு பாடல் காட்சி தானே எடுத்திட வேண்டியதுதானே என தோன்றலாம்.

ஆனால் அதில் நடிக்க வேண்டிய உலகநாயகன் இப்போ தக் லைஃப் படப்பிடிப்புக்காக டெல்லி சென்று விட்டார். மொத்தத்தில் இந்தியன் 2 ஜூன் மாத ரிலீஸ் தேதியில் இருந்து ஜகா வாங்கி விட்டது. இதனால் அந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டி இருக்கும் இரண்டு படங்களுக்கு நல்ல யோகம்தான்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்துக் கொண்டிருக்கும் டர்போ படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகிறது. அதே மாதிரி பிரபாஸ், அமிதாப்பச்சன், உலக நாயகன் கமலஹாசன் நடித்த கல்கி படமும் ஜூன் மாதம் தான் ரிலீஸ் ஆகிறது. அது மட்டுமா நம்ம தனுஷ் இயக்கத்தில் அவரே நடிக்கும் அவருடைய ஐம்பதாவது படமான ராயல் படமும் ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறது.