நீட் தேர்வின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டிய அஞ்சாமை.. விதார்த் ஜெயிப்பாரா? முழு விமர்சனம்

Anjaamai Movie Review: மைனா படத்தில் இருந்து தொடங்கி வித்தியாசமான கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விதார்த். அவருடைய நடிப்பில் இன்று அஞ்சாமை படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இயக்குனர் எஸ் பி சுப்பிரமணியம் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

பொதுவாக சமூக கருத்துள்ள படங்கள் பொருளாதார வெற்றியை பெறாவிட்டாலும், மக்கள் மனதில் நின்று பேசும். அப்படி ஒரு சமூக கருத்து நிறைந்த படமாக தான் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இப்போதைய பெரிய பிரச்சனையான நீட் தேர்வை பற்றி தெள்ளத் தெளிவாக இந்த படம் எடுத்துரைத்திறக்கிறது.

2016 ஆம் ஆண்டின் காலப்போக்கில் இந்த படம் நகர்கிறது. மேடை கலைஞரான விதார்த்துக்கு தன் மகனை தன்னைப் போலவே நடிகனாக மாற்ற வேண்டும் என ரொம்பவே ஆசை. ஆனால் அவருடைய மனைவி வாணி போஜன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

மகனை நன்றாக படிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை எடுத்து சொல்லி அதை நிறைவேற்ற பாடும் படுகிறார். ஒரு கிராமத்தில் இருக்கும் மாணவன் நீட் தேர்வில் சாதிக்க எப்படி எல்லாம் தடைகளை சந்திக்க வேண்டி வருகிறது என்பதை நோக்கி திரைக்கதை நகர்கிறது.

விதார்த்- சர்க்கார்
வாணி போஜன்- சரசு
ரஹ்மான்- மாணிக்கம்
க்ரித்திக் மோகன்- அருந்தவம்
‘விஜய் டிவி’ ராமர் – அதிசயம்

தன்னுடைய சொந்த கிராமத்தை விட்டுக் கூட வெளியில் வராத வித்தார்தின் குடும்பம், அவருடைய மகனுக்கு ஜெய்ப்பூரில் நீட் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது. மகனின் கனவுக்காக மொழி தெரியாத ஊரில் சிக்கிக் கொண்டு படும் பாட்டை இயக்குனர் ரொம்பவே மெனக்கட்டு சொல்லி இருக்கிறார்.

எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்து விட, அதன் பின்னர் விதார்தின் மகன் அரசாங்கத்தை எதிர்த்தே கேஸ் போடுவது போல் இந்த படம் அமைகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் நடிகர் ரகுமான் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இருந்தாலும் ஒரு சிறுவனுக்காக தன்னுடைய வேலையை விட்டுவிட்டு வக்கீல் ஆவது எல்லாம் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாததாக தான் இருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸ் இல் கோர்ட்டில் ரகுமான் பேசும் போது மொத்த லாஜிக்கும் மறந்து அட இவர் என்ன உண்மையை இப்படி புட்டு புட்டு வைக்கிறார் என ஆடியன்ஸ்கள் கைதட்டல்களை வாரி வழங்குகிறார்கள்.

திரைக்கதை வாயிலாக ரசிகர்கள் மனதில் நின்ற அஞ்சாமை படம் வசூலில் வெற்றி பெறுகிறதா என இந்த வார முடிவில் தெரிந்து விடும்.