ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்து இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்ததால் தொடர்ந்து மாளவிகா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து வந்தது.
இந்த சூழலில் தனுஷ் உடன் இணைந்து மாறன் படத்தில் மாளவிகா நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறைய மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பலர் பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் மாளவிகா மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்த போது ரசிகர்கள் சிலர் மாளவிகா மோகனன் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள். அதில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாளவிகா முகம் வீங்கி இருந்தது.
காரில் இருந்த இறங்கும் மாளவிகா

அதைப் பார்த்த ரசிகர்கள் இது மாளவிகா மோகனனா என்று ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர். இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரைசா வில்சன் தவறான சிகிச்சை பெற்றதால் முகம் வீங்கி பக்கவிளைவை சந்தித்தார்.
ரசிகர்களுக்கு உற்சாகமாக போஸ் கொடுக்கும் மாளவிகா

தற்போது அதேபோல் மாளவிகா மோகனனுக்கும் ஏதாவது தவறான சிகிச்சை மூலம் இவ்வாறு நடந்து இருக்குமோ என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். இப்போது மாளவிகா மோகனின் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன மாளவிகா
