வெகுளித்தனமாய் பிரபு நடித்த 5 படங்கள்.. ஒரே மாதிரியா.? இழந்த கேரியரை தூக்கி நிறுத்திய கமல்

Prabhu-Kamal Haasan: நடிகர் பிரபு திரைக்கு வந்த காலத்திலிருந்து, இன்று வரை சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாக இருக்கிறார். இதற்கு மிக முக்கியமான காரணம் அவர் நடித்த கேரக்டர்களும் கூட. பிரபு இதுவரைக்கும் நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்ததும் இல்லை. அதேபோல் வெகுளித்தனமான கேரக்டரில் இந்த ஐந்து படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார்.

சின்ன தம்பி : பிரபுவுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சின்னத்தம்பி. தாலி என்றால் என்னவென்று கூட தெரியாத அளவுக்கு வெகுளித்தனமாக அவரை இந்த படத்தில் காட்டி இருப்பார்கள். இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு முகம் சுளிக்காத அளவுக்கு அந்த கேரக்டரை அழகாக நடித்துக் கொடுத்திருப்பார் பிரபு. இன்று வரை இந்த படம் எல்லோருடைய பேவரைட் ஆகவும் இருக்கிறது.

செந்தமிழ் பாட்டு: சின்னத்தம்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி வாசு இயக்கத்தில் பிரபு மற்றும் சுகன்யா இணைந்து நடித்த திரைப்படம் செந்தமிழ் பாட்டு. இந்தப் படத்திலும் பிரபு ரொம்ப வெகுளித்தனமான கேரக்டராகவும், நன்றாக பாடல் பாடுபவராகவும் நடித்திருப்பார். பிரபுக்கு போட்டியாக சுகன்யாவும் இந்த திரைப்படத்தில் ரொம்ப வெகுளித்தனமான கேரக்டரில் நடித்திருப்பார்.

பாஞ்சாலங்குறிச்சி: சீமானின் இயக்கத்தில் பிரபு மற்றும் மதுபாலா இணைந்து நடித்த திரைப்படம் பாஞ்சாலங்குறிச்சி. இந்த படத்தில் பிரபு கிட்டான் என்ற கேரக்டரில் வழக்கம் போல வெகுளித்தனமான கேரக்டரில் நடித்திருந்தார். பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வீரனாகவும், அதே நேரத்தில் குழந்தைத்தனமாகவும் இந்த படத்தில் நடித்திருப்பார்.

உத்தமராசா: இயக்குனர் ராஜ் கபூர் இயக்கத்தில் பிரபு நடித்த திரைப்படம் உத்தமராசா. இந்த படத்தில் குஷ்பூ மற்றும் ரோஜா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். சின்னையா என்னும் கேரக்டரில் வரும் இவருக்கு இந்த படத்திலும் தொடர்ந்து வெகுளித்தனமான கேரக்டர் தான் அமைந்தது.

சீதனம்: இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் பிரபு நடிப்பில் 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சீதனம். இந்த படத்தில் சங்கீதா மற்றும் ரஞ்சிதா நடித்திருந்தனர். ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகும் பிரபு தன் மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் கேரக்டரில் நடித்திருப்பார். ஃபிளாஷ்பாக் காட்சிகள் முழுக்க வழக்கமான வெகுளித்தனமான கேரக்டர் தான் இவருக்கு.

பிரபு இப்படி தொடர்ந்து வெகுளித்தனமான கேரக்டர்களில் நடித்ததால், ஒரு காலகட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் அமையாமலேயே இருந்தது. கமலஹாசன் அவருடைய ரூட்டை கொஞ்சம் மாற்றி வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நடிக்க வைத்ததன் மூலம், அடுத்தடுத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் பிரபுவை தேடி வந்தன.