Actress Saritha: நடிகை சரிதா 90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். ஒரு நடிகை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அந்த காலகட்டத்தில் இருந்த மொத்த விதிகளையும் தகர்த்தெறிந்து தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் வெற்றி பெற்றவர். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சரிதா சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலத்திலேயே, முன்னணி ஹீரோயின்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறார்.
விஜயசாந்தி: நடிகை விஜயசாந்தி தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர். சூப்பர் ஸ்டாருக்கு மன்னன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். படத்தின் கிளைமாக்ஸ் வருகிறோம் ரஜினியை எதிர்க்கும் வெள்ளையாக இவர் நடித்திருப்பார். படத்தில் விஜயசாந்திக்கு குரல் கொடுத்தது நடிகை சரிதா.
நதியா: நடிகை நதியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய போது அவருக்கு மிகப்பெரிய இடம் கொடுத்த திரைப்படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. படத்தில் அவர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். நடிகை சரிதா தான் இந்த கேரக்டருக்கு டப்பிங் பேசி இருந்தார்.
மதுபாலா: தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பினாலும், கொள்ளை அழகினாலும் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை மதுபாலா. இவர் நடித்த படங்களில் ரோஜா மிகப்பெரிய ஹிட் அடிப்பது. மம்முட்டியின் நடிப்பில் வெளியான ஆணழகன் மற்றும் ரோஜா திரைப்படங்களில் மதுபாலாவுக்கு குரல் கொடுத்தது சரிதா.
நக்மா: 90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பேரழகான நடிகை நக்மா. சூப்பர் ஸ்டார் உடன் இவர் இணைந்து நடித்த பாட்ஷா திரைப்படம் இன்று வரை பிரபலமாக பேசப்படும் சூப்பர் ஹிட் திரைப்படமாகும். இந்த படம் மற்றும் லவ் பேர்ட்ஸ், அரவிந்தன் போன்ற படங்களுக்கு நக்மாவுக்கு டப்பிங் பேசியது சரிதா.
சினேகா: தன்னுடைய காலகட்டத்தில் இருந்த நடிகைகள் மட்டுமில்லாமல் இளம் ஹீரோயின்களுக்கும் சரிதா குரல் கொடுத்திருந்தார். புன்னகை அரசி சினேகா நடிப்பில் வெளியான புன்னகை தேசம் திரைப்படத்திற்கு அவருக்கு டப்பிங் கொடுத்தவர் நடிகை சரிதா.
மேலும் பாலிவுட் ஹீரோயின்களான தபு மற்றும் ஷில்பா ஷெட்டி நடித்த தமிழ் படங்களுக்கு சரிதா தான் குரல் கொடுத்திருந்தார். எஜமான் படத்தில் மீனாவுக்கு, பெரிய மருது படத்திற்காக ரஞ்சிதாவிற்கு, வள்ளி திரைப்படத்திற்காக பிரியா ராமனுக்கும் இவர் டப்பிங் பேசி இருக்கிறார்.