bharath-love

50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

Love Movie Trailer: நடிப்பிலும் நடனத்திலும் திறமைசாலியாக இருக்கக்கூடிய பரத், திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள படாத பாடுபடுகிறார். ஆனால் பரத்தின் 50-வது படமான லவ் படத்தில் அவருடைய உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றுள்ளது. இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

Also Read: ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

கொஞ்சம் கூட ஒத்துப்போகாத இந்த தம்பதியர்களுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றி கடைசியில் பரத் தன்னுடைய மனைவியவே கோபத்தில் அடித்து கொலை செய்து விடுகிறார். நிஜமாகவே வாணி போஜன் இறந்துவிட்டாரா? இதை எப்படி போலீசுக்கு தெரியாமல் மறைக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்த படத்திற்கு ரோனி ராப்பேல் இசையமைத்துள்ளார்.

Also Read: ஓவர் ஆணவத்தில் அழிந்த ஜெய்.. டேட்டிங்கில் வேஸ்ட் பீஸ்ன்னு கழட்டிவிட்ட 3 நடிகைகள்

இந்த படத்தில் வாணி போஜன், பரத் உடன் விவேக் பிரசன்னா, ராதாரவி டேனியல் ஆனி போப், ஆடம்ஸ், ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பே ‘மிரள்’ என்ற படத்தில் பரத்- வாணி போஜன் ஜோடி இணைந்த நிலையில் இரண்டாவது முறையாக லவ் படத்திலும் இணைந்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தான் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும்
எல்ஜிஎம் போன்ற இரண்டு படங்களும் வெளியாகிறது. இருப்பினும் லவ் திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் வெளியாகிறது. தமிழ் ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.

லவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ!

Also Read: இந்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாராகும் 8 படங்கள்.. ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு

jailer-first-single

அரேபிய குதிரையாக மாறி சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தமன்னா.. ட்ரெண்டாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

இனிமேல் சோசியல் மீடியாக்கள் முழுவதும் இந்த பாடல் தான் ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

dulgar-salmaan-king of kotha

நான் சொல்றப்ப தான் பகல், நான் சொல்றப்ப தான் ராத்திரி.. ரவுடிசம் செய்யும் துல்கரின் கிங் ஆஃப் கோதா டீசர்

இந்த கிங் ஆஃப் கோதா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விரைவில் வர இருக்கிறார்.

vijay-leo

2000 டான்சர்களோடு மரண குத்து போட்ட தளபதி.. லியோவின் ‘நா ரெடி’ பாடல் வீடியோ

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் படம் தான் லியோ. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நா ரெடி’ பாடல் ஆனது தளபதியின் 49வது பிறந்த நாளான இன்று வெளியிட திட்டமிட்டபடி, சில நிமிடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி அவருடைய ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பாடலின் ப்ரோமோவை கடந்த ஜூன் 20ம் தேதியே வெளியிட்டு பாடலின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தனர். அதுமட்டுமல்ல கடந்த சில தினங்களாக விஜய்யின் அரசியல் வருகையை பற்றி அதிகமாக பேசிக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் மத்தியில் லியோ படம் காணாமல் போனது. இந்த சமயத்தில் லியோ படத்தின் ‘நா ரெடி’ என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் தங்களது ட்ராக்கிற்கு கொண்டு வந்திருக்கின்றனர் லியோ பட குழுவினர்.

Also Read: ஒரே சமயத்தில் தலைவர், தளபதி விசுவாசிகளை வெறுப்பேற்றிய ப்ளூ சட்டை.. அநியாயத்திற்கு கலாய்த்து போட்ட ட்விட்

இந்த பாடல் ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் ‘நா ரெடி’ பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி இருக்கிறார். அது மட்டுமல்ல இவருடன் இணைந்து அனிருத் இசையமைத்து பாடியும் உள்ளார். இந்த படத்தில் வரும் ராப் பகுதிகளை பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்ட அசல் கோளாறு பாடியுள்ளார். அத்துடன் 2000 டான்ஸர்களுடன் விஜய் இந்த பாடலில் நடனமாடி ரணகளம் செய்திருக்கிறார். இந்த பாடலில் விஜய்யுடன் மன்சூர் அலிகானும் கையில் சரக்கு கிளாசுடன் ஆட்டம் போட்டிருக்கிறார்.

பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி, பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அத்துடன் இந்த பாடலில் புகை, மது குறித்த வரிகள் தான் பெரும்பாலும் இடம்பெற்று இருக்கிறது. கில்லி, கத்தி என விஜய்யின் படங்களை தொடர்புப்படுத்தும் வரிகளும் பாடலை மேலும் ரசிக்க வைக்கிறது.

Also Read: மேடையில் கைதட்டலை வாங்கிய தளபதியின் டக்கரான 6 குட்டி ஸ்டோரி.. லியோவிற்காக காத்திருக்கும் திரையுலகம்

விஜய்யின் அரசியல் பிரவேச கருத்துகளும் இந்தப் பாடலில் நிரம்பி கிடக்கிறது. தளபதியின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர்கள் பல விதங்களில் தங்களது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். பலவிதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் கொடுக்கும் ட்ரீட்டாகவே விஜய் இந்த பாடலை வெளியிட்டு இருக்கிறார்.

இப்போது லியோ படத்தின் ‘நா ரெடி’ லிரிக்ஸ் வீடியோ தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த பாடல் ஏகப்பட்ட பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது, நிச்சயம் இந்த பாடல் வேற லெவலுக்கு ஹிட் கொடுக்கப் போகிறது.

லியோ படத்தின் ‘நா ரெடி’ லிரிக்ஸ் வீடியோ இதோ!

Also Read: 40 வருடங்களாக விஜய்யின் இமேஜை கெடுத்து அசிங்கப்படுத்திய சம்பவங்கள்.. அரசியல் முடிவுக்கு காரணம் இதுதான்

dhanush-cinemapettai

அப்ப அந்த கெட்டப் கேப்டன் மில்லருக்கு இல்லையா.? 3ம் முறையாக பாலிவுட் இயக்குனருடன் மிரட்ட வரும் தனுஷ் வீடியோ

பத்து வருடங்களுக்குப் பிறகு அதே நாளில் இந்த கூட்டணியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

maamannan-trailer

தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில் ட்ரெய்லரும் அதை பெருமளவில் தூண்டியிருக்கிறது.

Thalainagaram 2 trailer

பேய் கதை கைவிட்டதால் ஆக்சன் கதையை கையில் எடுத்த சுந்தர் சி .. எப்படி இருக்கு தலைநகரம் 2 ட்ரெய்லர்

Sundar C: கலகலப்பான மசாலா திரைப்படங்களுக்கு பெயர் போனவர்தான் இயக்குனர் சுந்தர் சி. இவருடைய படங்கள் என்றாலே பெரும்பாலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தான் இருக்கும். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயிறு குலுங்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு தன்னுடைய படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பார் சுந்தர். இதனாலேயே இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்.

இயக்குனராக வெற்றியடைந்த சுந்தர் சி கடந்த 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அவருடைய திரைக்கதை பாணிக்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு முழுக்க ஆக்சன் திரைப்படமான இதில் நடித்தும் பெரிய அளவில் வெற்றியடைந்தார். அதன் பின்னர் படம் இயக்குவதில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி அடுத்தடுத்து வந்த பட வாய்ப்புகளில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார்.

Also Read:மார்க்கெட் இறங்கியதால் மதிக்காத சுந்தர் சி.. ஒயிட் பியூட்டி தமன்னாவின் பரிதாப நிலை

நடித்த படங்களும் கை கொடுக்காத நேரத்தில் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் இரண்டாகி கொண்டிருந்தது. சுந்தர் சி யும் திகில் மற்றும் நகைச்சுவை நிறைந்த அரண்மனை படத்தை இயக்கிய வெற்றி அடைந்தார். அதன் பின்னர் அவர் எடுத்த பேய் சீரிஸ் படங்கள் அந்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் மசாலா படங்களுக்கு திரும்பிய இவருக்கு தோல்விதான் கிடைத்தது.

இப்போது சுந்தர் சி தன்னுடைய வெற்றிப்படமான தலைநகரத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே டீசர் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், ட்ரெய்லரும் வெளியாகி மிரட்டி இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்சன், ரத்தம், கொலை என டிரைலர் முழுக்க அதிரடியை காட்டி இருக்கிறது படக்குழு. ‘ரைட் இஸ் பேக்’ என்னும் பயங்கர பில்டப்புடன் இந்த ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.

Also Read:ஓவர் கவர்ச்சி காட்டி வாய்ப்பை பெற்ற 5 நடிகைகள்.. தவம் கிடந்து சான்ஸ் கொடுக்கும் சுந்தர் சி

மீண்டும் ஃபார்முக்கு வர போராடும் ரவுடி ரைட்டாக சுந்தர்சியில் நடித்திருக்கிறார். வன்முறை, ஒரு நடிகையின் திடீர் மாயம் என இந்த கதை நகர்வது போல் டிரைலரில் காட்டப்பட்டிருக்கிறது. தலைநகரம் 2 என்றதும் மீண்டும் நாய் சேகரின் காமெடி காட்சிகள் இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு இந்த ட்ரெய்லர் கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு வேலை இனிவரும் அப்டேட்டுகளில் அது பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது.

 

தலைநகரம் படத்தின் முதல் பாகத்தில் போலீசார் சுந்தர் சி யை சுட்டுக் கொள்வது போல் முடிக்கப்பட்டு இருக்கும். எனவே இந்த இரண்டாம் பாகம் கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. முகவரி, நேபாளி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வி இசட் துரை இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் படம் பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை நான்காம் பாகமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

adipurush-trailer

அதர்மத்தை கூண்டோடு வேரறுக்க வரும் ஆதிபுருஷ் கடைசி ட்ரெய்லர்.. பயத்துடன் வெளியிட்ட பிரபாஸ்

இப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற உறுதியிலும், பயத்திலும் இருக்கும் பிரபாஸ் நினைத்ததை சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

sj surya-priya-bhavani-sankar

SJ சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் பொம்மை ட்ரெய்லர்

எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

licence-rajalakshmi

ராட்சசி ஜோதிகாவாக மாறிய விஜய் டிவி ராஜலட்சுமி.. லைசென்ஸ் ட்ரெய்லர் எப்படி இருக்கு? தேறுமா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளார்.

ranjith

4 வாரிசு நடிகர்களை ஒரே படத்தில் தூக்கிவிடும் பா ரஞ்சித்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரமை வைத்து தங்கலான்  என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் ஒரு ஸ்டன்ட் காட்சியில் சியான் விக்ரம் டூப் இல்லாமல் நடித்த போது கீழே விழுந்து அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தங்கலான் படபிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கியவர் மீண்டும் இளைஞர் கூட்டணியில் களமிறங்குகிறார். இந்த படத்திற்கு ப்ளூ ஸ்டார் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது.

Also Read:அவருக்கு வில்லனா நடிக்க முடியாது.. விக்ரமை ஒரே செக்கில் ஓகே சொல்ல வைத்த லைக்கா

பொதுவாக சமூக அநீதி மற்றும் சாதி அரசியலை பற்றி பேசும் இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தில் விளையாட்டை பற்றி பேசி இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வீடியோ ஒன்று நேற்று ரிலீசானது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுதே படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சென்னை 28 மற்றும் மெட்ராஸ் திரைப்படத்தின் கலவையாகவே இது இருக்கிறது.

எதிர் எதிர் பக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கிரிக்கெட் விளையாட்டிற்காக மோதிக் கொள்வது போல் தான் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜின் மகன் பிரித்விராஜ், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

Also Read:வளர்த்து விட்டுவிட்டவரை அடியோடு மறந்த விக்ரம்.. பொன்னியின் செல்வனை வைத்து கேரியரை ஓட்டும் பரிதாபம்

மேலும் 96 பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மயக்கிய கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். மேலும் பாடகர் அறிவு இந்த பாடலை எழுதி தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இந்த பாடல் காட்சி ஆரம்பிக்கிறது. மேலும் இந்த பாடல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இயக்குனர் பா ரஞ்சித் ஏற்கனவே தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு பட வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்திலும் அடுத்தடுத்து வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தூக்கி விட திட்டம் போட்டு இருக்கிறார். ரஞ்சித்தின் கதை மற்றும் கிரிக்கெட் விளையாட்டு என இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

Also Read:எல்லாம் அவளை மறக்கத்தான் என சுற்றித் திரிந்த விக்ரம்.. ஆறுதலுக்காக மணிரத்னம் எடுத்துள்ள தரமான முடிவு

2018-movie

100 கோடி வசூலை தாண்டிய ரியல் கேரளா ஸ்டோரி இதுதான்.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 2018 தமிழ் ட்ரெய்லர்

ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் இந்த படம் தற்போது தமிழிலும் வெளிவர இருக்கிறது.

சேரனாக மாறிய ஜெய், எக்ஸ் லவ்வருக்காக குடும்பத்தை மறக்கும் தீராக் காதல் ட்ரெய்லர்.. சூப்பரா! சொதப்பலா?

என்னதான் லவ்வர் பிரண்ட் என்று சொல்வதெல்லாம் போங்காட்டம். அதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு செட் ஆகாது என்று ஜெய் நண்பர் எடுத்துரைக்கிறார்.

Adipurush

ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா உருவாகியுள்ள இந்த படம் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவல் ஆகும்.

இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லரில் வரும் ஜூன்16ம் தேதி படம் வெளியாகுவதாகவும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மோஷன் கேப்சர், 3டி தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஆதிபுருஷ் உருவாகியுள்ளது.

Also Read: 84 ஏக்கரில் பிரபாஸின் பண்ணை வீடு.. வாயை பிளக்க வைக்கும் மொத்த சொத்து மதிப்பு

தற்போது வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் ட்ரைலரில் அனுமன், ராமனின் கதையை சொல்வது போல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. மானிட உருவத்தில் வாழ்ந்த கடவுள் ராமரின் கதை தன் ஆதி புருஷ். அறம் மற்றும் தர்மம் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டமாய் திகழ்ந்த ராமரின் கதை.

தர்மத்தால் அதர்மத்தில் அகங்காரத்தை அழித்த ராமரைப் பற்றிய கதை. யுக யுகங்களாக நம்முடைய உணர்வோடும் உள்ளத்தோடும் ராமாயணத்தின் கதைதான் இந்த படம். இதில் ராவணன் சீதாவிடம் பிச்சை கேட்பது போல் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வதும், அதன் பிறகு சீதாவை அனுமன் சந்திப்பதில் பிறகு ராவணனுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தையும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிரட்டலாக காண்பித்துள்ளனர்.

Also Read: பயத்தில் அட்லீக்கு கண்டிஷன் போட்ட ஷாருக்கான்.. யாருடனும் போட்டி போட விரும்பல

இதில் ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமர் தனது உயிரை விட அறவாழ்க்கை தான் முக்கியம் என போராடுகிறார். பல இடங்களில் ட்ரெய்லரை பார்க்கும் போதே சிலர்ப்பூட்டுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

மேலும் இந்த படம் பாகுபலி2 படத்தை போல் பிரபாஸுக்கு கை கொடுக்குமா என்றும் 1000 கோடி வசூலை வாரிக் குவிக்குமா என்பதுதான் தற்போது இந்திய திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. இந்தப் படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆதிபுருஷ் ட்ரெய்லர் இதோ!

Also Read: பான் இந்தியா ஹீரோக்களுடன் நடித்தும் மண்ணை கவ்விய பூஜா ஹெக்டே.. அடி மேல அடி வாங்கிய 4 பிளாப் படங்கள்

meg2-the-trench

டைனோசரையே தூக்கி சாப்பிடும் கடல் அரக்கன்.. அசுர பசியோடு வேட்டைக்கு தயாரான மெக் 2-தி ட்ரென்ஞ்ச் ட்ரெய்லர்

ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு உயிரினம் உலகத்தை ஆண்டு கொண்டிருந்தது என்ற வசனத்தோடு ட்ரெய்லர் ஆரம்பிக்கிறது.